மக்களவை தேர்தல்..! காங்கிரஸ் முதல் வேட்பாளர் பட்டியல்.. ராகுல்காந்தி மீண்டும் வயநாட்டில் போட்டி
Congress: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் முதல் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் தேதியானது வெகுவிரைவில் இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் ஆளும் பாஜக கட்சி அண்மையில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் 195 பேர் அடங்கிய முதல் பட்டியலை வெளியிட்டது.
இந்த நிலையில் காங்கிரஸ் தற்போது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் முதல் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் வேணுகோபால் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளார், முதற்கட்டமாக 39 வேட்பாளர்கள் பட்டியலை அவர் வெளியிட்டுள்ளார்.
Read More – ரூ.65 கோடி வரியை வருமானவரித்துறை வசூலிக்க காங்கிரஸ் எதிர்ப்பு! மனுவை தள்ளுபடி செய்த தீர்ப்பாயம்
அதன்படி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி மீண்டும் வயநாட்டில் போட்டியிடுகிறார், கோழிக்கோட்டில் சிம்.எம்.கே ராகவன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது., திருச்சூரில் முரளிதரன் போட்டியிடுகிறார். சத்தீஷ்கர், கர்நாடகா, கேரளா, மேகாலயா, சிக்கிம், தெலங்கானா, திரிபுரா, லட்சத்தீவு ஆகிய மாநிலங்களுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி முதற்கட்ட வேட்பாளர்களின் முழு பட்டியல் கீழே,
कांग्रेस ने जारी की पहली सूची #LokSabhaElection2024 #CongressList #BreakingNews pic.twitter.com/aaz36rlXFx
— Sach Bedhadak (@SachBedhadak) March 8, 2024