இதுதான் தவெகவின் நிலைப்பாடு… தனது கட்சியின் உறுதிமொழியை அறிவித்தார் தலைவர் விஜய்!
Tvk Vijay : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி களமிறங்கியுள்ள நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் பல்வேறு பணிகளை விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் முதல் உறுப்பினராக சேர்ந்து உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் அக்கட்சி தலைவர் விஜய்.
Read More – தோழர்களாய் ஒன்றிணைவோம்…முதல் வீடியோ வெளியிட்ட தவெக தலைவர் விஜய்.!
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவ கொள்கையை பின்பற்றி தேர்தலை நோக்கி எனது பயணம் தொடங்கியுள்ளது என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வீடியோ பதிவுடன் வெளியிட்டுள்ளார். அதில், சட்டமன்ற தேர்தலை நோக்கி அரசியல் பயணத்தில் அனைவரும் இணைய அழைப்பு விடுத்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் உறுதிமொழியையும் வெளியிட்டுள்ளார். அந்த உறுதிமொழியை, நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன்.
Read More – கொலை வழக்கில் வேறு நீதிமன்றத்தில் சரணடைவது செல்லாது – ஐகோர்ட்
நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன்.
Read More – திமுகவிடம் நாங்க 4 கேட்டோம்.. 2 சீட் கொடுத்துருக்காங்க.! திருமாவளவன் பேட்டி.!
மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன் என உறுதி அளிக்கின்றேன். சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உறுதி அளிப்பதாக தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
எனவே, இந்தி திணிப்புக்கு எதிர்ப்பும், இரட்டை மொழிக் கொள்கையில் தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் கூறியுள்ளார் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.