இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும்?இன்றைய ராசி பலன் .!

horoscope9

Today horoscope-மாசி மாதம் 26 ஆம் தேதி[ மார்ச் 9, 2024] இன்றைக்கான ராசி பலன்களை இங்கே காணலாம்.

மேஷம்:

இன்றைய நாள் பரபரப்பாக காணப்படும். உங்கள் செயல் திறனுக்கு நல்ல பெயர் எடுப்பீர்கள். உங்கள் துணையுடன்   அன்பை பகிர்ந்து கொள்வீர்கள் .இன்று நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்:

இன்று உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். உங்களுக்குள் மறைந்திருக்கும் திறமைகளை வெளி கொணர்வதன் மூலம் திருப்தி  காண்பீர்கள். உங்கள் துணையுடன் வெளிப்படையாக பழகுவீர்கள். நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்கும். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

மிதுனம்:

இன்று உற்சாகமாக இருப்பீர்கள் .பிரார்த்தனை மேற்கொள்வதன் மூலம் நன்மை பெறலாம். இன்று அதிக பணிகள் காணப்படும் .மேல் அதிகாரிகளுடன் சில பிரச்சனைகளை சந்திக்கலாம் . துணையுடன் உணர்ச்சிவசப்படுவீர்கள். நிதி நிலைமை சிறிது ஏமாற்றத்தை அளிக்கும். தாயின் உடல் நலத்திற்காக பண செலவு செய்ய நேரலாம்.

கடகம்:

இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள் அல்ல. அனைத்து காரியங்களிலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் .பணிகளை மேற்கொள்ளும் போது பொறுமை அவசியம். உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும். இன்று சிறிது கடன் வாங்க நேரலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

சிம்மம்:

இன்று உங்கள் நண்பர்கள் மற்றும் பரீட்சியமானவர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள். முக்கிய முடிவுகள் நல்ல பலனை கொடுக்கும். பணியில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உங்கள் துணையுடன் இனிமையான தருணங்களை பேசுவீர்கள். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும் .ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

கன்னி:

இன்று அனைத்து விதத்திலும் மகிழ்ச்சி காணப்படும். உங்கள் செயல்களில் தன்னம்பிக்கை காணப்படும். கடினமான பணிகளையும் விரைவாக முடிப்பீர்கள். உங்கள் துணையுடன் நல் உறவை பராமரிப்பீர்கள். பூர்வீக சொத்தின் மூலம் பணம் வர வாய்ப்புள்ளது .ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

துலாம்:

உங்கள் விருப்பங்கள் நிறைவேற சாதகமான நாளாக இருக்காது .இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தள்ளிப் போடவும். பணியிடத்தில் மேல் அதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். உங்கள் துணையுடன் அனுசரணையான போக்கை மேற்கொள்ளவும். வரவு செலவு இரண்டும் கலந்து காணப்படும். தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது, எண்ணெய்  உணவுகளை தவிர்க்கவும்.

விருச்சிகம்:

இன்றைய நாள் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். அதிக பணிகள்  காரணமாக மும்மரமாக இருப்பீர்கள் .உங்கள் துணையுடன் எதிர்மறை உணர்வுகளை வெளிப்படுத்துவீர்கள் .இன்று பணத்தை கவனமாக கையாள வேண்டும், ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

தனுசு:

இன்று உங்களுக்கு சாதகமான நாள், புதிய மனிதர்களை சந்திப்பீர்கள். உங்கள் திறமைக்கு மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். உங்கள் துணையின் உணர்வைப் புரிந்து கொண்டே நடந்து கொள்வீர்கள். பண வரவு மகிழ்ச்சியாக இருக்கும் .ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

மகரம்:

இன்றைய சவால்களை திறமையுடன் சமாளிக்க பொறுமை தேவை. நீங்கள் கவனமுடன் பணியாற்ற வேண்டும். உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும் .பண விஷயத்தில் கவனமாக இருக்கவும். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும், உங்கள் குழந்தையின் உடல் நலத்திற்கு பண செலவு செய்வீர்கள்.

கும்பம்:

இன்று நீங்கள் சுய முயற்சியை சார்ந்து செயல்பட வேண்டும், முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். பணிகளை திட்டமிட்டு செய்யவும். உங்கள் துணையுடன் பேசும் போது எதையும் லேசாக எடுத்துக் கொள்ளுங்கள். நிதிநிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்காது, ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மீனம்:

இன்று நீங்கள் விளைவுகளை எதிர்பார்க்காமல் செயல்களை செய்வதன் மூலம் வெற்றி கிடைக்கும். அதிக பணிகள் காணப்படும் .உங்கள் துணையுடன் தொடர்பு கொள்வதில் பிரச்சனை காணப்படும். இன்று செலவுகள் செய்ய நேரலாம், ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
Congress MPs Protest - Mallikarjun Kharge - Rahul Gandhi - Priyanka gandhi
arudra darisanam (1)
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala