மகளிர் தினம் ஏன் கொண்டாடுகிறோம் தெரியுமா?

womens day 2

மகளிர் தினம் -ஆண்டுதோறும் மார்ச் எட்டாம் தேதி  மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. மகளிர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது  அதன் வரலாறு பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

இன்றைய சமுதாயத்தில் பெண்கள் பலதுறையில் சிறந்து விளங்குகிறார்கள் என்பது மறுக்க முடியாது. இத்தினத்தில் தான் சாதனை படைத்த பெண்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. இது பெண் இனத்திற்கு ஒரு உந்துதலாக உள்ளது.

மகளிர் தினம் தோன்றிய வரலாறு:

19ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் முதலிய ஐரோப்பிய நாடுகள், ரஷ்யா ,அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து மகளிர்கள் திரண்டு தங்களின் ஊதிய உயர்வு,  எட்டு மணி நேர வேலை மற்றும் வாக்காளர் உரிமை முதலியவற்றை வலியுறுத்தி போராடினார்கள் அப்போது பிரான்சில் ருசியானில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளான் என்ற மன்னன் பெண்களை அரசவையில் ஆலோசனை குழுக்களில் இடம் மற்றும் வாக்குரிமை அளிக்க ஒப்புதல் அளித்தார். அந்த நாள் மார்ச் திங்கள் எட்டாம் நாள். ஒவ்வொரு நாடுகளிலும் மாறுபட்ட நாட்களில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது . ஆனால் 1975 ஆம் ஆண்டு மார்ச் 8 சர்வதேச பெண்கள் தினமாக ஐநா அறிவித்தது.

வீட்டில் ஜன்னல் வழியாக வீதியை எட்டி  பார்த்த பெண்கள் இன்று விண்வெளியில் இருந்து இந்த பிரபஞ்சத்தையே பார்க்கிறார்கள், அந்த அளவுக்கு பெண்கள் முன்னேறிக் கொண்டே தான் இருக்கிறார்கள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்