அஜித்துக்கு அறுவை சிகிச்சை தான்! மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம்!
Ajith Kumar நடிகர் அஜித்குமார் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில், நடிகர் அஜித் வழக்கமான பரிசோதனைக்காக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்க பட்டதாக கூறப்பட்டது. அதனை தொடர்ந்து நடிகர் அஜித்குமாருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.
READ MORE – நடிகர் அஜித் குமார் மருத்துவமனையில் அனுமதி.!
வழக்கமான பரிசோதனை தானே என்று ரசிகர்கள் சற்று அமைதியாக இருந்த நிலையில், நேற்று இரவு திடீரென மூளையில் அறுவை சிகிச்சை என வெளியான இந்த தகவலை பார்த்த அஜித் ரசிகர்கள் அனைவரும் சற்று அதிர்ச்சியாகி என்னாச்சு? என்பது போல கேள்விகளை எழுப்ப ஆரம்பித்துவிட்டனர். இந்த தகவல் உண்மையா? இல்லையா? என்பது போல கேள்விகளை எழுப்ப ஆரம்பித்துவிட்டனர்.
இதனையடுத்து, அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்து விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது ” நீங்கள் பகிர்ந்துள்ள மூளைக் கட்டி குறித்த தகவல் பொதுவானது என்றாலும் படிக்கும் போது பகீரென்கிறது. அஜித் சாருக்கு அப்படி ஏதும் கட்டியில்லை. அண்மையில் சாரின் நெருங்கிய நண்பரான வெற்றி துரைசாமி மரணத்துக்கு பின்னர் கொஞ்சம் மனதால் சோர்ந்து போனவர் நார்மல் செக்-அப்புக்குதான் அப்போலோ போனார்.
read more- விஜயகாந்தை கோபப்படுத்திய ரவுடிகள்! படப்பிடிப்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம்?
போன இடத்தில் ஏதேதோ ஸ்கேன் உள்ளிட்ட சகல டெஸ்டுகளும் எடுத்த போது காதுக்கு கீழே உள்பகுதியில் ‘சின்ன பல்ஜ்’ எனப்படும் புடைப்பு உள்ளதைக் கண்டறிந்து இதனால் பாதிப்பு ஏதுமில்லை. அதே சமயம் அரை மணி நேரத்தில் இதை சரி செய்து விடலாம் என்று டாக்டர் சொன்னதை அடுத்து இமிடியட்டாக சரி செய்ய சொல்லி விட்டார்.
READ MORE – கமல் சாரை பார்த்தது கனவு மாதிரி இருக்கு! ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குனர் எமோஷனல்!
நேற்றே அந்த பல்ஜ் அரை மணி அவகாசத்தில் நீக்கப்பட்டு நேற்றிரவே ஜெனரல் வார்டுக்கு வந்துவிட்ட அஜித் சார் இன்றே டிஸ்சார் ஆகி விடுவார். வதந்திகள் எதையும் நம்ப வேண்டாம்” எனவும் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா கூறியுள்ளார். இதன் மூலம் அஜித்குமாரின் உடல் நிலை குறித்த உண்மையான தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் பெருமூச்சு விட்டுள்ளனர்.