திமுக – மதிமுக தொகுதி பங்கீடு.! வேட்பாளர் யார்.? எந்த தொகுதியில் போட்டி.?
DMK – MDMK : மக்களவை தேர்தல் நெருங்குவதால் கூட்டணி பேச்சுவார்த்தையில் பிரதான அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லீம் லீக் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் தொகுதி பங்கீடை இறுதி செய்த நிலையில், விசிக, மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து வருகின்றன.
Read More – திமுக – விசிக – மதிமுக.! இன்று இறுதி முடிவு எட்டப்படுமா.? முதல்வருடன் சந்திப்பு.!
இன்று காலை திமுக – மதிமுக பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே மதிமுக சார்பில் இரு மக்களவை தொகுதி கேட்கபட்ட நிலையில் தற்போது ஏற்கனவே வெளியான தகவலின்படி, ஒரு மக்களவை தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஆகியவை ஒதுக்க இறுதி செய்யப்பட்டு தொகுதி பங்கீடு கையெழுத்தாகியுள்ளது.
Read More – புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம்.! அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி.!
இதனை அடுத்து, மதிமுக சார்பில் அதன் தற்போதைய தலைமை பொறுப்பாளர் துரை வைகோ போட்டியிடுவார் என கூறப்படுகிறது. மக்களவை தேர்தலில் துரை வைகோ போட்டியிட வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் மதிமுக நிறுவனர் வைகோ ஏற்கனவே மாநிலங்களவை உறுப்பினராக தொடர்வதால், மீண்டும் அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பு கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read More – மகளிர் தினத்தன்று பிரதமர் கொடுத்த அறிவிப்பு… சமையல் சிலிண்டர் விலை அதிரடி குறைவு!
அடுத்து, மதிமுக சார்பில் போட்டியிட விருதுநகர் அல்லது திருச்சி மக்களவை தொகுதி கேட்கலாம் என மதிமுக முடிவு செய்து இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. தொகுதி, வேட்பாளர் உள்ளிட்ட விவரங்களை விரைவில் மதிமுக அதிகாரபூர்வமாக வெளியிடும் என எதிர்பார்க்கப்டுகிறது.