நாட்டையே உலுக்கிய புதுச்சேரி சிறுமி கொலை..! கைதான இருவருக்கும் 15 நாள் நீதிமன்றக் காவல்
Puducherry: புதுச்சேரியில் 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டு கால்வாயில் தூக்கி வீசப்பட்ட சம்பவத்தில் கைதான இரண்டு பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியை சேர்ந்த 5ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமியின் சடலம் அவளது வீட்டின் அருகே உள்ள சாக்கடை கால்வாயில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சோலைநகர் பகுதியை சேர்ந்த கருணாஸ் (வயது 19), விவேகானந்தன் (வயது 57) ஆகியோரை போலீசார் கைது செய்த நிலையில் இருவரும் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு கொடூரமாக கொன்றது தெரியவந்தது, இந்த சம்பவம் மாநிலத்தை தாண்டி நாட்டையே உலுக்கியுள்ளது.
Read More – புத்தகப் பை, பொம்மையுடன் சிறுமியின் இறுதி ஊர்வலம்.! கண்ணீர் மல்க வழியனுப்பிய பொதுமக்கள்.!
இந்த நிலையில் புதுச்சேரி சிறுமி படுகொலை வழக்கில் கைதான விவேகானந்தன், கருணாஸ் ஆகியோருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய சிறைக்கு சென்று நேரடியாக விசாரணை நடத்திய நீதிபதி இளவரசன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.