ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் சேர்ந்து கூட்டணி.? ஒடிசா அரசியலில் பரபரப்பு.!

Naveen Patnaik And PM Modi

BJD-BJP : கடந்த 2000 மே மாதம் முதல் 5 சட்டமன்ற தேர்தல்களில் தொடர்ந்து வெற்றியடைந்து ஆட்சியை பிடித்துள்ளது பிஜு ஜனதா தளம். 5 முறை முதலமைச்சராக தொடர்கிறார் நவீன் பட்நாயக். இதில் கடந்த 1998, 1999, 2004மக்களவை தேர்தல், 2000 மற்றும் 2004ஆம் ஆண்டு மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து இருந்தது நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம்.

Read More – இப்படித்தான் தேர்தலை நடத்த வேண்டும்.. தேர்தல் ஆணையரிடம் விசிக கோரிக்கை.!

பின்னர் 2009ஆம் ஆண்டு தேர்தலில் ஏற்பட்ட தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பின்வாங்கியது நவீன் பட்நாயக்கின் BJD. கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே போல கூட்டணிக்கான பேச்சுவார்த்தை இரு தரப்பில் இருந்தும் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது . .

Read More – காஷ்மீர் சட்டப்பிரிவு 370 ரத்தும்… பிரதமரின் முதல் பயணமும்…

மக்களவை தேர்தலோடு, ஒடிசா மாநில சட்டப்பேரவை தேர்தலும் வரவுள்ள நிலையில்,  நேற்று நவீன் பட்நாயக்கின் வீட்டில் BJD மூத்த தலைவர்கள் வரும் தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். அதே நேரத்தில், ஒடிசா மாநில பாஜக தலைவர் மன்மோகன் சமல் தங்கள் கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.

Read More – மநீம நிர்வாகிகள் கூட்டம் ஒத்திவைப்பு.. கமலின் பயணம் ரத்து? காரணம் இதுதானா?

நவீன் பட்நாயக்குடன் BJD துணைத் தலைவரும், மாநில எம்.எல்.ஏ.வுமான தேபி பிரசாத் மிஸ்ரா ஆலோசனை மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், பிஜு ஜனதா தளம் ஒடிசா மக்களின் நலன்களுக்கே முன்னுரிமை அளிக்கும். இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கூட்டணி அமைப்பது தொடர்பான விவாதங்கள் நடைபெற்றன என்று மிஸ்ரா செய்தியாளர்களிடம் கூறினார். ஆனால் அவர் பாஜகவுடன் கூட்டணி என்று உறுதியாக குறிப்பிடவில்லை.

கடந்த 2019 சட்டமன்ற தேர்தலில் 146 இடங்களில் 112 இடங்களை வென்று BJD ஆளும் கட்சியாகவும், 23 தொகுதிகளில் பாஜக வென்று எதிர்கட்சியாகவும் உள்ளது. 21 மக்களவை தொகுதிகளில் 12 தொகுதிகளில் BJDயும், 8 தொகுதிகளில் பாஜகவும் வெற்றி பெற்று இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

MK Stalin - AUS vs IND
muthu ,meena (4) (1)
Suburban Railway - MTC Chennai
SPVelumani
Seeman - Rajini
goat vijay sk rajinikanth