INDvsENG : 83 ரன்கள் பின்னிலையில் இந்திய அணி ..! ரோஹித் – ஜெய்ஸ்வால் அரை சதம் ..!
INDvsENG : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று தொடங்கிய 5-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதனை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் முதல் செஷனின் பாதி வரை மிக சிறப்பாக ஆதிக்கம் செலுத்தினர். அதன் பிறகு இந்திய அணியின் சூழல் பந்து வீச்சாளரான குலதீப் யாதவின் சூழலில் சிக்கி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி திணறியது.
Read More :- INDvsENG : குலதீப் சூழலில் சிக்கிய இங்கிலாந்து ..! 5 விக்கெட் எடுத்து புதிய சாதனை ..!
முதல் செஷனில் கைகொடுக்காத அஸ்வினின் சூழல் 2-வது செஷனலில் கைகொடுத்தது. இதனால் அவரும், அவர் பங்குக்கு 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக சாக் கிராலி மட்டும் 79 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய அணியில் குலதீப் யாதவ் 5 விக்கெட்டுகளும், அஸ்வினும் 4 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தினர். ஜடேஜா அவர் பங்குக்கு 1 விக்கெட்டை எடுத்தார்.
இதனால், இங்கிலாந்து அணி 57.4 ஓவர்களில் 10 விக்கெட்டையும் இழந்து 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது தங்களது முதல் இன்னிங்சை நிறைவு செய்தது. அதன் பிறகு முதல் இன்னிங்ஸ்க்கு களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரரான ரோஹித்தும், ஜெய்ஸ்வாலும் சிறப்பாக ஆட்டத்தை தொடங்கினர். மிகச்சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் 57 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
Read More :- IPL 2024 : ஐபிஎல் தொடருக்கு முற்று புள்ளி வைக்கும் தினேஷ் கார்த்திக் ..?
அதை தொடர்ந்து, 5-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளின் முடிவில் இந்திய அணி 30 ஓவருக்கு 135 ரன்களை எடுத்துள்ளது. இந்திய அணியில் ரோஹித் சர்மா 83 பந்துக்கு 52* ரன்களும், கில் 39 பந்துக்கு 26* ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். இந்திய அணி இன்னும் 83 ரன்கள் பின்னிலையில் உள்ளது. இரண்டாம் நாள் ஆட்டம் நாளை காலை 9.30 மணிக்கு தொடங்கும்.