தொடரும் இழுபறி.. இன்னும் ஓரிரு நாட்களில் இறுதி முடிவு.! தமிழக காங்கிரஸ் திட்டவட்டம்.!
Congress : இன்னும் ஓரிரு நாட்களில் திமுகவுடனான தொகுதிப் பங்கீடு குறித்து இறுதிகட்ட முடிவு எடுக்கப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கூறியுள்ளது.
மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீட்டு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் தமிழகத்தில் திமுக கூட்டணியில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லீம் லீக் உள்ளிட்ட 4 கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டியிருந்தது. இருப்பினும், காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
Read More – இன்று வடசென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கும் மிக பெரிய ‘மின்’ திட்டம்.!
இதில் குறிப்பாக திமுக கூட்டணியில் இருக்கும் பெரிய கட்சியான காங்கிரஸுடன் ஒரு சில கட்டங்கள் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று உள்ளது. ஆனால், தொடர் இழுபறி காரணமாக தொகுதி பங்கீடு இன்னும் இறுதியாகவில்லை. இந்த நிலையில், ஓரிரு நாட்களில் திமுகவுடனான தொகுதிப் பங்கீடு குறித்து இறுதிகட்ட முடிவு எடுக்கப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய செல்வப்பெருந்தகை, தேர்தல் பத்திரம் தொடர்பான தகவலை வெளியிட அவகாசம் கோரிய எஸ்பிஐயை கண்டித்து சென்னையில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்தார். அதன்படி, சென்னையில் உள்ள எஸ்பிஐ அலுவலகம் முன்பு இன்று மாலை 3 மணிக்கு காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார். இதன்பின் பேசிய அவர், ராமேஸ்வரம் கோயிலை உலகத்தரம் வாய்ந்த ஆலயமாக மாற்றுவேன் என 2014ல் பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார்.
Read More – மநீம நிர்வாகிகள் கூட்டம் ஒத்திவைப்பு.. கமலின் பயணம் ரத்து? காரணம் இதுதானா?
ஆனால், இதுவரை ராமேஸ்வரம் கோயிலை புதுப்பிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.37,000 கோடி கேட்டது மாநில அரசு. ஆனால், ஒரு ரூபாய் கூட இதுவரை மத்திய அரசு ஒதுக்கவில்லை. தமிழ்நாட்டுக்கு எதுவுமே செய்யாமல் எப்படி வந்து வாக்கு கேட்கிறார் பிரதமர் மோடி.
தமிழ்நாடு மக்களை ஒருபோதும் பிரதமர் மோடி ஏமாற்ற முடியாது. விவசாயிகளின் நண்பன் என சொல்லும் பிரதமர், புதிய வேளாண் சட்டத்தை ஏன் கொண்டுவந்தார் எனவும் கேள்வி எழுப்பினார். இதனைத்தொடர்ந்து தொகுதி பங்கீடு குறித்த கேள்விக்கு பதிலளித்து அவர் கூறியதாவது, இன்னும் ஓரிரு நாட்களில் திமுகவுடனான தொகுதிப் பங்கீடு குறித்து இறுதிகட்ட முடிவு எடுக்கப்படும்.
Read More – புத்தகப் பை, பொம்மையுடன் சிறுமியின் இறுதி ஊர்வலம்.! கண்ணீர் மல்க வழியனுப்பிய பொதுமக்கள்.!
மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி என 40 தொகுதிகளிலும் வெற்றி பெறப் போகிறோம். அதனால் காத்திருந்து தொகுதிப் பங்கீடு குறித்து இறுதிகட்ட முடிவு எடுப்போம் என கூறிய செல்வப்பெருந்தகை, திமுக – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டில் எந்த பிரச்னையும் இல்லை என்றும் திமுகவை விட அதிக இடங்களை ஒதுக்கினாலும் அதிமுகவுடன் கூட்டணி இல்லை எனவும் குறிப்பிட்டார்.