சச்சின் பந்து போட …சூர்யா பேட்டிங் ஆட…ஒரே குதூகலம் தான்!

suriya

Suriya தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் சூர்யா தற்போது கிரிக்கெட் பிரபலங்களான சுரேஷ் ரெய்னா, சச்சின் ஆகியோருடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது. சூர்யா நடிப்பையும் தாண்டி கிரிக்கெட்டில் அதிகம் ஆர்வம் காட்டக்கூடியவர். அந்த வகையில் அவர் ISPLT10 (இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் T10 ) கிரிக்கெட் போட்டியில் சென்னை அணியை சூர்யா தான் வாங்கி இருக்கிறார். இது அதிகாரப்பூர்வமாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

read more- பட்ஜெட் 40 கோடி… ஓடிடியில் கூட யாரும் வாங்கல! சூரி படத்திற்கு வந்த சோதனை!

ISPLT10 (இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் T10 ) கிரிக்கெட் போட்டி மார்ச் 6-ஆம் தேதி முதல் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, ISPL கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்கள் கலந்து கொண்ட போட்டி ஜாலியாக நேற்று நடைபெற்றது.இந்த போட்டியில் நடிகர்கள் சூர்யா மற்றும் அக்ஷய் குமார் கிரிக்கெட் வீரர்கள் சச்சின், இர்பான், முனாவர் உட்பட பலரும் விளையாடினார்கள்.

read more- விஜயகாந்தின் திறமைய நிறைய பேர் வெளியேகொண்டு வரவேயில்லை! ஹிட் படங்களின் இயக்குனர் வேதனை!

இந்த போட்டியில் கலந்து கொண்ட சூர்யா பேட்டிங் ஆடும் வீடியோ ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு வீடியோவில் சச்சின் பந்துவீச அதனை சிரித்து கொண்டே நடிகர் சூர்யா பேட்டிங் செய்கிறார். மற்றோரு வீடியோவால் சுரேஷ் ரெய்னா பந்து வீச அதனை வேகமாக சூர்யா பவுண்டரி பக்கம் விளாசுகிறார்.

இது தொடர்பான வீடியோக்கள் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டு வருகிறது. வீடியோவை பார்த்த பலரும் சூர்யா அண்ணாவை இப்படி பார்க்கவே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இருப்பினும் சூர்யா இந்த போட்டியில் போல்ட் அவுட் ஆனார். எனவே, அவர் போல்ட் அவுட்  ஆனது ட்ரோல் ஆகவும் மாறி இருக்கிறது.

read more- விஜயகாந்தை கோபப்படுத்திய ரவுடிகள்! படப்பிடிப்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம்?

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்