வசூலில் அதிரடி காட்டி மிரள விட்ட ‘பிரம்மயுகம்’! எப்போது ஓடிடி ரிலீஸ் தெரியுமா?
Bramayugam OTT பிப்ரவரி மாதம் முதல் மார்ச் வரை மலையாள சினிமாவில் வெளியான படங்கள் தான் எல்லா மொழிகளிலும் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், பிரேமலு, பிரம்மயுகம், மஞ்சும்மல் பாய்ஸ், ஆகிய படங்கள் எல்லாம் மலையாள சினிமா மட்டுமின்றி எல்லா மொழிகளிலும் பலத்த வரவேற்ப்பை பெற்று இன்னும் திரையரங்குகளில் ஓடி கொண்டு இருக்கிறது.
read more- நயன்தாராவை அழவைத்த விக்னேஷ் சிவன்! எப்படி எல்லாம் பண்றாரு பாருங்க!
இதில் முதன் முதலாக மம்முட்டி நடிப்பில் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி வெளியான பிரம்மயுகம் திரைப்படம் தான் வசூலை குவிக்க ஆரம்பித்தது. இந்த திரைப்படத்தை ராகுல் சதாசிவன் என்பவர் இயக்கி இருந்தார். படத்தில் அமல்டா லிஸ், அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன், மணிகண்டன் ஆச்சாரி உள்ளிட்ட பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.
read more- சூரிக்கு பாராட்டு மழை தான்…பெர்லினில் கவனம் ஈர்த்த ‘கொட்டுக்காளி’ திரைப்படம்.!
27 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி வசூலை குவித்தது என்று சொல்லலாம். மலையாளத்தில் மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதுவரை படம் உலகம் முழுவதும் 60 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
read more- மார்ச் மாதம் ஓடிடியில் வெளியாகும் முக்கிய திரைப்படங்கள்? ‘லால் சலாம்’ முதல் ‘லவ்வர்’ வரை!
இந்நிலையில், இந்த திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர். அவர்களுக்காகவே படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த சூப்பரான தகவல் ஒன்று கிடைத்து இருக்கிறது. அதன்படி, இந்த பிரம்மயுகம் திரைப்படம் வரும் மார்ச் மாதம் 15-ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, திரையரங்குகளில் படம் பார்க்க தவறியவர்கள் ஓடிடியில் படத்தை பார்க்கலாம்.