அதிமுக கூட்டணியில் இணைந்தது அகில இந்திய ஃபார்வட் பிளாக் கட்சி!
AIADMK : மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்தது அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி.
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பணியில் தேர்தல் ஆணையம் ஒருபக்கமும், அரசியல் கட்சிகள் மறுபக்கமும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். தேர்தலுக்கான அட்டவணை அடுத்தவாரம் வெளியாகும் என எதிர்பாக்கப்படும் நிலையில், பிரதான அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணி, தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்டவை தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Read More – மீண்டும் வரலாறு படைப்போம்! திமுக ஆட்சியமைத்த நாள் குறித்து முதல்வர் ஸ்டாலின் பதிவு!
அந்தவகையில், தமிழகத்தை பொறுத்தவரை வழக்கம்போல் வலுவாக இருக்கும் திமுக கூட்டணி வரும் தேர்தலை சந்திக்க உள்ளது. திமுக, அதன் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தில் உள்ளது. இதுவரை 4 கட்சிகளுடன் தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்பட்ட நிலையில், கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுடன் தொடர் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
Read More – விவசாயிகளின் டெல்லி முற்றுகை போராட்டம் இன்று மீண்டும் தொடங்குகிறது!
ஆனால், மறுபக்கம் பாஜக – அதிமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்ட நிலையில் தற்போது இரு கட்சிகளும் தனித்தனியே கூட்டணி அமைக்கும் முன்னைப்பில் செயல்பட்டு வருகிறது. அதன்படி, தேமுதிக, பாமக கட்சிகளுடன் அதிமுக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அந்த இரண்டு கட்சிகளும் ஒரு மாநிலங்களவை பதவி கேட்பதால் கூட்டணி பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
Read More – காணாமல் போன 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை!
அதேபோல் தேமுதிக, பாமாவுடன் பாஜகவும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் அதிமுக கூட்டணியில் அகில இந்திய ஃபார்வட் பிளாக் கட்சி இணைந்துள்ளது. சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் ஃபார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச்செயலாளர் கதிரவன் சந்தித்து பேசியுள்ளார்.
இந்த சந்திப்பின்போது, கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து இரு கட்சியும் முதற்கட்ட ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது, அதிமுக கூட்டணியில் தங்களுக்கு தேனி, ராமநாதபுரம் தொகுதியில் ஏதேனும் ஒரு தொகுதி வழங்க வேண்டும் என ஃபார்வட் பிளாக் கட்சி கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.