விவசாயிகளின் டெல்லி முற்றுகை போராட்டம் இன்று மீண்டும் தொடங்குகிறது!
Farmers protest : மத்திய அரசுக்கு எதிரான விவசாயிகளின் டெல்லி முற்றுகை போராட்டம் இன்று மீண்டும் தொடங்குகிறது.
வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, பயிர்க்கடன் தள்ளுபடி, எம்.எஸ் சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கங்கள் கடந்த 13ம் தேதி டெல்லியை நோக்கி சலோ டெல்லி என்ற பேரணியை தொடங்கினர்.
Read More – மீண்டும் வரலாறு படைப்போம்! திமுக ஆட்சியமைத்த நாள் குறித்து முதல்வர் ஸ்டாலின் பதிவு!
சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் டெல்லி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டிராக்டர் மூலம் டெல்லி நோக்கி பேரணியை தொடங்கினர்.
விவசாயிகளை டெல்லிக்குள் நுழைய விடாமல் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், அதனை பொருட்படுத்தாமல் விவசாயிகள் முன்னேறி வந்தனர். அதுமட்டுமில்லாமல், விவசாயிகள் மீது காவல்துறை கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசியும், தடியடி நடத்தியும் பேரணியை தடுத்தனர்.
Read More – இந்தியாவின் முதல் நீருக்கடியிலான சுரங்க மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்கும் பிரதமர்
இதனால், பஞ்சாப் – ஹரியானா எல்லை பகுதியான ஷம்புவில் விஷசாயிகள் குவிந்தனர். இதனிடையே, மத்திய அரசுடன் விவசாய சங்க பிரதிநிதிகள் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சுமுக முடிவு எட்டவில்லை. இதன் காரணமாக போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் திட்டமிட்டனர். பின்னர் தற்காலிகமாக போராட்டத்தை தள்ளிவைப்பதாக விவசாய சங்கத்தினர் அறிவித்தனர்.
Read More – ஆப்கானிஸ்தானில் கனமழை, பனிப்பொழிவால் 39 பேர் பலி..! 14000 கால்நடைகள் உயிரிழந்த பரிதாபம்
இந்த நிலையில், விவசாயிகளின் டெல்லி முற்றுகை போராட்டம் இன்று மீண்டும் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், டெல்லி எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில், கிசான் மஸ்தூர் மோர்ச்சா மற்றும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா உள்ளிட்ட விவசாய அமைப்பு நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் இன்று டெல்லிக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.