போன் அடிச்சாலும் எடுக்க மாட்டேன்! வாய்ப்பு கொடுத்த நிறுவனத்தை கண்டுகொள்ளாத பிரதீப் ரங்கநாதன்?
Pradeep Ranganathan நடிகரும் இயக்குனருமான பிரதீப் ரங்கநாதன் கடைசியாக லவ் டுடே என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து இருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று மிகப்பெரிய ஹிட் ஆனது. 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய சாதனைகளையும் படைத்திருந்தது.
இந்த திரைப்படம் பிரதீப் ரங்கநாதனுக்கு இரண்டாவது திரைப்படம் தான். முதல் திரைப்படம் அவருக்கு கோமாளி படம் தான். ஜெயம் ரவியை வைத்து அவர் இயக்கியிருந்த அந்த திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த திரைப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் நிறுவனம் தான் தயாரித்தும் இருந்தது.
read more- சூரிக்கு பாராட்டு மழை தான்…பெர்லினில் கவனம் ஈர்த்த ‘கொட்டுக்காளி’ திரைப்படம்.!
இந்நிலையில், வேல்ஸ் நிறுவனம் சமீபகாலமாக தயாரிக்கும் படங்கள் அனைத்துமே வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்து வரும் நிலையில் மீண்டும் மிகப்பெரிய ஒரு வெற்றியை கொடுத்து பழைய நிலைமைக்கு திரும்ப வேண்டும் என்ற திட்டத்தோடு இருக்கிறதாம். எனவே அதன் ஒரு பகுதியாக தான். கோமாளி பட குழுவை வைத்து மீண்டும் ஒரு படத்தை தயாரிக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறதாம்.
read more- சாய் பல்லவி பெயரில் பண மோசடி? வழக்கு தொடர்ந்ததா ‘RBI’? உண்மை இதோ!!
இந்த முடிவோடு பிரதீப் ரங்கநாதனுக்கு கால் செய்து பார்த்தார்களாம். ஆனால் பிரதீப் ரங்கநாதன் இனிமேல் நடித்த ஹீரோவாகவும் அதைப்போல தானே இயக்கி படங்களில் தானே நடிக்கவும் முடிவு செய்திருப்பதன் காரணமாக வேல்ஸ் நிறுவனம் போன் கால் கூட எடுக்க மாட்டிக்கிறாராம். எனவே இதனால் வேல்ஸ் நிறுவனம் சற்று கோபத்தில் இருக்கிறதாம்.
read more- நயன்தாராவை அழவைத்த விக்னேஷ் சிவன்! எப்படி எல்லாம் பண்றாரு பாருங்க!
இந்த தகவலை பிரபல யூடியூப் சேனலான வலைப்பேச்சு தெரிவித்துள்ளது. முதன் முதலாக ஜெயம் ரவி தன்னை வைத்து கோமாளி படம் இயக்க வாய்ப்பு கொடுத்தாலும் அந்த படத்தை தயாரித்தது வேல்ஸ் நிறுவனம் தான். எனவே, தங்களுடைய தயாரிப்பில் படத்தை இயக்க வாய்ப்பு கொடுத்த வேல்ஸ் நிறுவனத்தின் போன்கால் கூட பிரதீப் ரங்கநாதன் எடுக்கவில்லை என்ற தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரதீப் ரங்கநாதன் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் LIC என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.