INDvsENG : 14-வது வீரராக 100கிளப்பில் இணைய போகும் அஸ்வின் ..!
INDvsENG : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் 5-வது மற்றும் கடைசி போட்டியானது நாளை மறுநாள் மார்ச்-7ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த போட்டிக்கான அணியை ஏற்கனவே பிசிசிஐ வெளியிட்டு இருந்தது. இந்த போட்டிக்கான பறிச்சியில் இரு அணிகளும் ஈடுப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து இந்திய அணியின் சூழல் பந்து வீச்சளரான ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வேதச டெஸ்ட் போட்டிகளில் இது வரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.
Read More :- IPL 2024 : பெங்களூரு அணிக்கு எதிராக அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன் ..! முதல் மூன்று இடத்தில் இவர்கள் தான் ..!
தற்போது, நாளை மறுநாள் நடைபெற உள்ள டெஸ்ட் போட்டியில் அஸ்வின் இடம் பெற்றுள்ளார் என்பது பிசிசிஐ வெளியிட்டுள்ள பட்டியலில் உறுதியானது. அதனால் நாளை மறுநாள் தொடங்கும் டெஸ்ட் போட்டி அஸ்வினுக்கு 100-வது சர்வேதச டெஸ்ட் போட்டியாகும். இதன் மூலம் இந்திய அணியில் 14-வது வீரராகவும், ஒட்டு மொத்தமாக 77-வது வீரராகவும் இந்த பட்டியலில் இடம் பிடிக்க உள்ளார். இந்த 100-வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று அஸ்வின் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகிறார்.
Read More :- Ranji Trophy : அரை இறுதியில் படு தோல்வி அடைந்த தமிழ்நாடு ..! இன்னிங்ஸ் வெற்றியை பெற்ற மும்பை ..!
இந்திய அணியில் சுனில் கவாஸ்கர் (125 டெஸ்ட் போட்டிகள்), திலீப் வெங்சர்க்கார் (116 டெஸ்ட் போட்டிகள் ), கபில்தேவ் (131 டெஸ்ட் போட்டிகள்), சச்சின் டெண்டுல்கர் (200 டெஸ்ட் போட்டிகள்), அனில் கும்ப்ளே (132 டெஸ்ட் போட்டிகள்), ராகுல் டிராவிட் (164 டெஸ்ட் போட்டிகள்), சவுரவ் கங்குலி (113 டெஸ்ட் போட்டிகள்), விவிஎஸ் லட்சுமண் (134 டெஸ்ட் போட்டிகள்), ஹர்பஜன் சிங் (103 டெஸ்ட் போட்டிகள்), வீரேந்திர சேவாக் (104 டெஸ்ட் போட்டிகள்), இஷாந்த் சர்மா (105 டெஸ்ட் போட்டிகள்), விராட் கோலி (113 டெஸ்ட் போட்டிகள்), சேதேஷ்வர் புஜாரா (103 டெஸ்ட் போட்டிகள்) அதற்கு அடுத்த படியாக ரவிச்சந்திரன் அஸ்வின் 14-வது வீரராக இடம் பெற உள்ளார்.
Read More :- IPL 2024 : ஹைதராபாத்தின் கேப்டன் ஆனார் வெற்றி கேப்டன் ..! சாதித்து காட்டுமா SRH ..?
அதே போல, இந்திய அணியில் சவுரவ் கங்குலி, சுனில் கவாஸ்கர், அனில் கும்ப்ளே மற்றும் சேதேஷ்வர் புஜாராவுக்கு அடுத்த படியாக 35 வயதை கடந்து 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாட போகும் 4-வது வீரராகவும் அஸ்வின் உள்ளார். மேலும், இங்கிலாந்து அணியின் ஜானி பேர்ஸ்டோவ் இதுவரை 99-டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். இவருக்கும் இந்த 5-வது டெஸ்ட் போட்டி 100-வது டெஸ்ட் போட்டியாகும். இதன் மூலம் இங்கிலாந்து அணியின் 17-வது வீரராக ஜானி பேர்ஸ்டோவ் 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளார்.