SBI வங்கி செயல் கேவலமானது.! விளாசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.!

Minister Palanivel Thiyagarajan

Palanivel Thiyagarajan – உச்சநீதிமன்றம் கடந்த மாதம் தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகள் நிதி பெறுவதை தடை செய்தது . மேலும் , இதுவரை எந்தெந்த கட்சிகள் பெற்ற தேர்தல் பத்திரங்கள் குறித்து பாரத ஸ்டேட் வங்கி இம்மாதம் தேர்தல் ஆணையத்தில் மார்ச் 6 (நாளை) பதில் அளிக்க வேண்டும் என்றும், அதனை தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

Read More – பிரதமர் மோடியை சந்தித்தது ஏன்? அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

ஆனால், இந்த உத்தரவை செயல்படுத்த பாரத ஸ்டேட் வங்கி (SBI) கால அவகாசம் கேட்டுள்ளது. வரும் ஜூன் 30ஆம் தேதிக்குள் தேர்தல் பத்திர விவரங்களை சமர்பிப்பதாக கூறியுள்ளது. இந்தியாவில் மிக பெரிய வங்கியாக இருக்கும் SBI, ஒரு தகவல்களை வெளியிட 3 மாத காலம் அவகாசம் கேட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Read More – ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவம்… தமிழகத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை!

இது குறித்து தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  நானும் 20 ஆண்டுகள் வங்கியில் பணியாற்றியுள்ளேன். தேர்தல் பத்திரங்கள், யார் யார் வாங்கியுள்ளனர் என்பது குறித்த விவரங்களை வெளியிடுவது என்பது வெறும் 2 நிமிட வேலை. இது ஒரு வங்கி நடத்த அடிப்படையாக தேவைப்படும் தொழில்நுட்ப வசதி ஆகும்.

உலகத்தில் 5வது பெரிய பொருளாதார நாடாக கூறப்படும் நாட்டில் உள்ள மிக பெரிய வங்கியாக இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இப்படி சொல்வது அதிர்ச்சிக்குள்ளகியுள்ளது. SBIஇன் இந்த செயல் மிகவும் கேவலமாக உள்ளது என கடுமையாக விமர்சித்தார்.

ReadMore – சனாதனம் வரலாற்றை திரித்து பேச வேண்டாம்! ஆளுநர் ரவிக்கு அய்யா வைகுண்டர் தலைமைபதி கண்டனம்

மேலும் அவர் பேசுகையில், பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை முறை பிரதமர் தமிழகம் வந்தார் .? புயல் வந்த போது தமிழகம் வந்து மக்களை சந்தித்தாரா.? இப்போது ஏன் வந்தார் என உங்களுக்கே தெரியும். தமிழக விவகாரத்தில் அரசியல் செய்யாமல், அரசின் கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் எனவும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களிடம் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live update
power cut image
Legislative Assembly Session
2 children HMPV virus
rn ravi sivasankar
RN Ravi - TN Assembly
edappadi palanisamy Who is that sir