வன்கொடுமை செய்யப்பட்ட ஸ்பானிஷ் பெண்ணுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு.!
Jharkhand Rape Case: இந்தியாவுக்கு சுற்றுலா வந்த ஸ்பெயின் நாட்டுப் பெண் வன்கொடுமை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை கைது செய்த காவலர்கள் தப்பியோடிய 4 பேரை தேடி வருகின்றனர். தற்போது, அந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவருக்கு ஜார்கண்ட் துணை கமிஷனர் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கினார்.
READ MORE – ஸ்பெயின் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு .! தலைமை செயலர், டிஜிபிக்கு பறந்த உத்தரவு.!
அப்போது தப்பியோடிய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என அவர் காவலர்களிடம் கோரிக்கை வைத்தார்.இதற்கிடையில், இழப்பீடு வழங்கியதற்கு அந்த பெண்ணிற்கு நடந்த சம்பவத்தைவிடவும் கீழானது என சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்துவருகிறது.
READ MORE – மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா..!
ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஒரு தம்பதி இரு சக்கர வாகனத்தில் ஆசிய நாடுகளை சுற்றி பார்த்து வந்துள்ளனர். அந்த வகையில், இந்தியா சுற்றி பார்க்க வந்த, அந்த வெளிநாட்டு தம்பதிக்கு மார்ச் 1ஆம் தேதி இரவு நேர்ந்த கொடூரம் இந்தியா முழுக்க பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
READ MORE – இனிமேல் முன்பின் தெரியாத பெண்ணை இவ்வாறு அழைத்தால் சிறை.!
அதாவது, மேற்கு வங்காளத்திலிருந்து நேபாளத்திற்குச் சென்றபோது ஹன்ஸ்திஹா காவல் நிலைய எல்லையில் தான் ஸ்பெயின் பெண் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் 7 பேர் தொடர்புள்ளதாகவும், 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.