பிரதமர் மோடியை சந்தித்தது ஏன்? அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

PTR: தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டதையடுத்தே மதுரை வந்த பிரதமர் நரேந்திர மோடியை, அரசு சார்பில் சந்தித்து வரவேற்றதாக தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகையின் போது மதுரை மாவட்டத்திற்கு வந்த அவரை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் சென்று வரவேற்றார்.

இது குறித்து சமூகவலைதளங்களில் பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இன்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தப் போது அவரிடம் பிரதமர் மோடி உடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அப்போது அவர் கூறுகையில், “மதுரை வந்த பிரதமர் நரேந்திர மோடியை அரசு சார்பில் வரவேற்க சென்றேன்.

Read More – ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவம்… தமிழகத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்த அரசாங்க உத்தரவை தான் நான் செய்தேன். இது அரசாங்கத்தின் பணி,  இதில் தனிநபர் விருப்பமோ இல்லை அரசியலோ கிடையாது. பிரதமருக்கும், எனக்கும் தனிப்பட்ட உறவு போல் சிலர் போலி செய்திகளை பரப்புகின்றனர், பிரதமரிடம் அரசியல் பேசவில்லை. நான் மரியாதையாக அவரை வரவேற்றேன், அதற்காக எனக்கு நன்றி தெரிவித்து தட்டிக் கொடுத்தார்” என கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்