தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள்! யார் யாருக்கு என்னென்ன விருது?

TNAwards 2015

TNAwards2015 தமிழக அரசு திரைப்பட விருதுகள் தமிழ் நாடு அரசால் ஆண்டுதோறும் வெளியாகும் தமிழ்த் திரைப்படங்களில் சிறந்த திரைப்படங்கள் மற்றும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.  அந்த வகையில், கடந்த 2015-ஆம் ஆண்டிற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

read more- ஷாருக் முதல் நயன் வரை….தாதாசாகேப் பால்கே விருது வென்றவர்களின் மொத்த லிஸ்ட்.!

அதில், தனிஒருவன், இறுதிச்சுற்று, 36 வயதினிலே, பசங்க 2,  ஆகிய படங்கள் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை பெற்றுள்ளது. குறிப்பாக சிறந்த நடிகைகான விருது  36 வயதினிலே படத்தில் அருமையாக நடித்த ஜோதிகாவுக்கு வழங்கப்படவுள்ளது. சிறந்த வில்லன் கதாபாத்திரத்தில் தனி ஒருவன் படத்தில் நடித்த அரவிந்த் சாமிக்கு வழங்கப்படவுள்ளது. இந்நிலையில், யார் யாருக்கு என்னென்ன விருது என்பதனை விவரமாக பார்க்கலாம்.

தமிழ்நாடு அரசின் 2015 திரைப்பட விருதுகள்

விருதுகள்

  • சிறந்த நடிகை – ஜோதிகா (36 வயதினிலே)
  • சிறந்த வில்லன் -அரவிந்த் சாமி (தனி ஒருவன்)
  • சிறந்த இயக்குனர்-  சுதா கொங்கரா (இறுதிச்சுற்று)
  • சிறந்த கதை ஆசிரியர் – மோகன் ராஜா (தனி ஒருவன்)
  • சிறந்த ஒளிப்பதிவாளர் – ராம்ஜி (தனி ஒருவன்)
  • சிறந்த இசையமைப்பாளர் – ஜிப்ரான் (பாபநாசம் & உத்தம வில்லன்)
  • சிறந்த நகைச்சுவை நடிகர் – சிங்கம் புலி (அஞ்சுக்கு ஒண்ணு)
  • சிறந்த நடிகா்- ஆா்.மாதவன் (இறுதிச்சுற்று)
  • சிறந்த நகைச்சுவை நடிகை – தேவதா்ஷினி( 36 வயதினிலே & திருட்டுக் கல்யாணம்)
  • சிறந்த குணச்சித்திர நடிகா்- தலைவாசல் விஜய் (அபூா்வமகான்)
  • சிறந்த குணச்சித்திர நடிகை – கௌதமி (பாபநாசம்)
  • சிறந்த உரையாடலாசிரியா் – இரா.சரவணன் (கத்துக்குட்டி)
  • சிறந்த குழந்தை நட்சத்திரம்-  பேபி வைஷ்ணவி மற்றும் மாஸ்டா் நிஷேஸ் (பசங்க 2)
  • சிறந்த நடன ஆசிரியா் – பிருந்தாமாஸ்டர் (தனி ஒருவன்)
  • சிறந்த சண்டைப் பயிற்சியாளா்- ரமேஷ் (உத்தம வில்லன்)
  • சிறந்த கலை இயக்குநா் – பிரபாகரன் (பசங்க 2)
  • சிறந்த பாடலாசிரியர் – விவேக் (36 வயதினிலே)
  • சிறந்த பின்னணிப் பாடகா் கானா பாலா (வை ராஜா வை)
  • சிறந்த பின்னணிப் பாடகி- கல்பனா ராகவேந்தா்(36 வயதினிலே)
  • சிறந்த எடிட்டா் – கோபி கிருஷ்ணா (தனி ஒருவன்)

சிறப்பு பரிசு 

சிறந்த படம் என்ற பிரிவுகளில் முதல் பரிசு, தனி ஒருவன் படத்திற்கும் இரண்டாம் பரிசு பசங்க 2 படத்திற்கும், சிறந்த படம் மூன்றாம் பரிசு பிரபா என்ற படத்திற்கும் நான்காவது பரிசாக இறுதிச்சுற்று படத்திற்கும் 5-வது பரிசு 36 வயதினிலே படத்திற்கும் வழங்கப்பட இருக்கிறது.

read more- தாதா சாகேப் பால்கே விருது வென்ற ஷாருக்கான் – நயன்தாரா.!

அதைப்போல, சிறந்த நடிகா் சிறப்புப் பரிசு வை ராஜா வை படத்தில் நடித்த கௌதம் காா்த்திக்கு வழங்கப்படவுள்ளது. சிறந்த நடிகைகான சிறப்புப் பரிசு இறுதிச்சுற்று படத்திற்காக ரித்திகா சிங்க்கு வழங்கப்படவுள்ளது.

read more- கிராமி விருதுகள் 2024: வெற்றியாளர்களின் முழு பட்டியல்!

விருது விழா விவரம்

இந்த விருதுகள் வழங்கும் விழாவானது சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலைபுரம், முத்தமிழ்ப் பேரவை, டி.என். ராஜரத்தினம் கலையரங்கில் நாளை அதாவது புதன்கிழமை (மாா்ச் 6) மாலை 6 மணிக்கு நடைபெற இருக்கிறது. பிரமாண்டமாக நடைபெறவுள்ள இந்த விழாவில் செய்தி துறை அமைச்சர் மு பே சாமிநாதன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் , இந்து சமயம் மற்றும் அறநிலை துறை அமைச்சர் கே பி சேகர் பாபு ஆகியோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்