இனிமேல் முன்பின் தெரியாத பெண்ணை இவ்வாறு அழைத்தால் சிறை.!
Darling: முன்பின் அறிமுகம் இல்லாத பெண்ணை ‘டார்லிங்’ என அழைப்பது இந்திய தண்டனை சட்டப் பிரிவு 354 (A)-ன் கீழ் பாலியல் வன்கொடுமைக்கு ஈடானது என கொல்கத்தா உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. அதாவது, கொல்கத்தாவில் மது போதையில் பெண் காவலரை ‘டார்லிங்’ என அழைத்த நபருக்கு 1 மாத சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டது.
READ MORE – நாங்க மோடியின் குடும்பம்… மத்திய அமைச்சர்களின் சமூக வலைதள அப்டேட்ஸ்.!
கடந்த 2015ம் ஆண்டு துர்கா பூஜையை முன்னிட்டு, பண்டிகை காலங்களில் அசம்பாவிதத்தை தவிர்க்கும் வேலையில் ஈடுபட்டிருந்த பெண் கான்ஸ்டபிளை ஜனக் ராம் என்ற நபர், “டார்லிங் அபராதம் விதிக்க வந்தாயா?” என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதால், பாதிக்கப்பட்ட பெண் போலீசார் இது தொடர்பாக புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
READ MORE – புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இஸ்ரோ தலைவர் சோம்நாத்
இந்த வழக்கில் கடந்து ஆண்டு ஜனக் ராமமுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனையடுத்து, இந்த வழக்கை எதிர்த்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “காவல்துறை கான்ஸ்டபிளாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், தெருவில் ஒரு ஆண், குடிபோதையில் இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும், முன்பின் தெரியாத ஒரு பெண்ணை ‘டார்லிங்’ என அழைப்பது பாலியல் துன்புறுத்தலுக்கு ஈடானது என்று கூறி சிறை தண்டனை விதிக்கலாம் என உத்தரவிட்டனர்.
READ MORE – கர்நாடகாவில் பரபரப்பு…தேர்வு எழுத வந்த 3 மாணவிகள் மீது ஆசிட் வீச்சு.!
இந்நிலையில், அறிமுகம் இல்லாத ஒரு பெண்ணை “டார்லிங்” என்று அழைப்பது குற்ற செயலாகும், இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 354A (ஒரு பெண்ணின் அடக்கத்தை மீறுதல்) மற்றும் 509 ஆகிய பிரிவுகளின் கீழ், பாலியல் குற்றமாகும், சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கல்கத்தா உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.