கர்நாடகாவில் பரபரப்பு…தேர்வு எழுத வந்த 3 மாணவிகள் மீது ஆசிட் வீச்சு.!
Karnataka: கர்நாடகா மாநிலம் மங்களூருவில் தேர்வெழுத வந்த மாணவிகள் 3 பேர் மீது கேரளாவை சேர்ந்த அபின் என்பவர் ஆசிட் வீசிவிட்டு தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மங்களூரு நகருக்கு அருகில் உள்ள கடப்பாவில் உள்ள அரசு கல்லூரியில் நடந்தது தெரிய வந்துள்ளது.
READ MORE – பாஜக தேர்தல் நிதி! ரூ.2000 நன்கொடை வழங்கிய பிரதமர் மோடி
கல்லூரியின் வளாகத்தில் பல்கலைகழகத்திற்கு முந்தைய பாடப்பிரிவு (பியுசி) தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்த போது, இந்த சம்பவம் நடந்துள்ளது. தாக்குதலுக்குப் பிறகு, அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார், ஆனால் சம்பவத்தின் போது, அருகில் இருந்தவர்கள் அவரைப் பிடித்து, பின்னர் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
READ MORE – என் கணவரை தாக்கி…7 பேர்..,ஸ்பானிஷ் பெண்ணின் பதைபதைக்க வைத்த வாக்குமூலம்.!
இந்நிலையில், போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஆசிட் வீசிய நபர் கேரளாவை சேர்ந்த அபின் என்பதும், காதல் தோல்வியால் இவ்வாரு செய்ததாக தெரியவந்தது. தற்பொழுது, ஒரு பெண்ணை தாக்க வந்த சமையத்தில் மூன்று பேரும் பாதிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட மூன்று மாணவிகளும் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.