ரஞ்சிக் கோப்பை அரையிறுதி! திணறும் தமிழ்நாடு அணி: வலுவான நிலையில் மும்பை

Ranji Semifinal: ரஞ்சிக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டிகள் நேற்று தொடங்கின. இதில் முதல் அரையிறுதிப் போட்டியில் விதர்பா மற்றும் மத்தியப் பிரதேச அணிகள் மோதும் நிலையில் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாடு மற்றும் மும்பை அணிகள் விளையாடி வருகின்றன. இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
மும்பை அணி வீரர்களின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தமிழ்நாடு அணி 64.1 ஓவர்களில் 146 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக விஜய சங்கர் 44 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 43 ரன்களும் எடுத்தனர். மும்பை அணி சார்பில் தாகூர் 2 விக்கெட்களும், துஷர் தேஷ்பாண்டே 3 விக்கெட்களும் வீழ்த்தினார்கள். இதனை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய மும்பை அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்தது. இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை அந்த அணி தொடர்ந்தது.
Read More – IPL 2024 : ஸ்டெய்ன் இல்லை .. இனிமேல் இவர் தான் பயிற்சியாளர் ..! SRH அணிக்கு முதல் அடி ..?
மும்பை அணியின் ஷர்துல் தாக்கூர் அபாரமாக விளையாடி சதமடித்தார். அவர் 104 பந்துகளில் 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 13 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் அடங்கும். முஷீர் கான் 55 ரன்களும், ஹர்திக் தமோர் 35 ரன்களும் எடுத்தனர். இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் மும்பை அணி 9 விக்கெட்கள் இழப்பிற்கு 353 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி 207 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!
December 19, 2024
மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!
December 18, 2024
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024