தமிழக அரசை கண்டித்து நாளை அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

Edappadi Palaniswami: தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் நாளை கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் போதைப் பொருள் புழக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தத் தவறிய விடியா திமுக அரசைக் கண்டித்தும் நாளைய தினம் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.

நாளைய போராட்டத்தோடு நிச்சயமாக இது நின்றுவிடப் போவதில்லை. தமிழ்நாட்டில் கடைசி துளி போதைப் பொருள் ஒழியும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும்! பெற்றோர்களே, இந்த விடியா ஆட்சியில் தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறி வருகிறது. நம் பிள்ளைகளை நாம் தான் பார்த்துக் கொள்ளவேண்டும்.

Read More – அதிமுகவில் நடிகை காயத்ரி ரகுராமுக்கு பதவி..! எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

தமிழ்நாட்டில் ரயில் பெட்டிகள் முதல் கார்ப்ரேஷன் குப்பைகள் வரை எங்கு பார்த்தாலும் கோடிக்கணக்கான மதிப்புடைய போதைப் பொருட்கள் பொட்டலம் பொட்டலமாக கண்டெடுக்கப்படுகின்றன. கவனமாக இருங்கள், மாணவச் செல்வங்களே, இளைய சமுதாயமே- உங்கள் எதிர்காலம் மிக முக்கியம். ஒரு சிறிய தவறு கூட பெரிய தண்டனைகளை பெற்றுத் தந்துவிடும்” என தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்