அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.! மகனை சைலண்டாக களமிறக்கிய தனுஷ்.!

DHANUSH YATRA

Raayan: நடிகர் தனுஷுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகனான யாத்ராவை சினிமாவில் அதுவும் தனது திரைப்படத்தில் களமிறக்கி உள்ளதாக ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் தன்னுடைய 50வது படமான ராயன் திரைப்படத்தினை இயக்கி முடித்துவிட்டார். தற்பொழுது, தனது மூன்றாவது இயக்கமான ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்” படத்தை இயக்கி வருகிறார்.

READ MORE – பட தோல்வியால் அந்த விஷயத்தை செய்த கங்கனா ரனாவத்! உண்மையை உளறிய பயில்வான் ரங்கநாதன்!

காதல் கதையம்சத்தை கொண்டு இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, கடந்த வாரம் முழுவதும் ‘ராயன்’ படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்கிற அப்டேட் குவிந்த வண்ணம் இருந்தது. அதன்படி, எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், பருத்தி வீரன் பட நடிகர் சரவணன் துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி மற்றும்  வரலட்சுமி சரத்குமார் என இதுவரை இல்லாத மிரட்டும் பட்டாளமே நடித்துள்ளது.

READ MORE – அண்ணன் – தம்பிக்கு ஜோடியாக நடிக்கும் அதிதி ஷங்கர்! உங்க காட்டுல மழை தான்!

அறிவிப்பின்படி, அவர்களது கதாபாத்திரம் ப்ளாக் அண்ட் வைட் ஆக மிரட்டும் வகையில் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இப்படி ஒட்டு வித்யாசமான காம்போவாக இருக்க, இந்த படத்தில் மேலும் லிட்டில் நட்சத்திரம் இணைந்துள்ளதாக ஒரு சுவாரஸ்யமான தகவல் பரவி வருகிறது.

READ MORE – அம்பானி வீட்டு திருமணம்: பாடகி ரிஹானா வாங்கிய பிரமாண்ட சம்பளம்?

அதாவது, தனுஷ் தனது மூத்த மகன் யாத்ராவுக்கு நடிப்பின் மீது ஆசை இல்லாததால், படத்தை ஒளிப்பதிவு செய்யும் போஷனை கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. அட ஆமாங்க… ராயன் படத்தை யாத்ரா ஷூட் செய்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. யாத்ராவுக்கு 17 வயது தான் ஆகிறது, பள்ளியில் 11 அல்லது 12ம் வகுப்பு படித்து வருவதாக சொல்லப்படுகிறது.

அது மட்டும் இல்லாமல், ராயன் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் என போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வேலை ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷுக்கு உதவியாக பணி புரிந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சரி எது என்னவோ படம் வெளியாகும் பொழுது இதற்கான விடை தெரிந்து விடும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்