விஜயகாந்தின் திறமைய நிறைய பேர் வெளியேகொண்டு வரவேயில்லை! ஹிட் படங்களின் இயக்குனர் வேதனை!

vijayakanth
Vijayakanth கேப்டன் விஜயகாந்த் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் கூட அவர் நடித்த படங்கள் அவர் செய்த உதவிகள் என்றுமே காலத்தால் அழியாதவையாக இருக்கும் என்றே கூறலாம். தமிழ் சினிமாவில் ஆக்சன் ஹீரோவாக அறிமுகமாகி கமிர்ஷியல் படங்களிலும் நடித்தவர் விஜயகாந்த். ஒரு காலத்தில் இவர் நடிக்கும் படங்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்ததது.

READ MORE – முன்னணி நடிகர்கள் சம்பளம் குறைப்பு? ஆலோசனை கூட்டத்தில் முடிவு?

அந்த சமயம் எல்லாம் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு அடுத்ததாக நடிகர் விஜயகாந்த் தான் என்று பலரும் கூறினார்கள். அந்த அளவிற்கு விஜயகாந்திற்கு ரசிகர்கள் கூட்டம் இருந்தது. இந்நிலையில், விஜயகாந்த் பற்றி பல பிரபலங்கள் பேட்டிகளில் பேசி வருகிறார்கள். அந்த வகையில் விஜயகாந்த் வைத்து வானத்தை போல, மரியாதை ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் விக்ரமன் சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜயகாந்த் பற்றி பேசியுள்ளார்.

read more- அந்த மாதிரி காட்சியில் தயக்கம்…’எனக்கில்ல ஹீரோக்கு’! ரியா சுமன் ஓபன் டாக்!!

இது குறித்து பேசிய இயக்குனர் விக்ரமன் ” என்னை பொறுத்தவரை விஜயகாந்த் ஒரு ஜென்டில்மேன் என்று தான் கூறுவேன். படப்பிடிப்புக்கு அவரை போல யாருமே சீக்கிரமாக வரமாட்டார்கள். இரவு 1 மணிக்கு படப்பிடிப்பு முடிந்த பிறகு அடுத்த நாள் காலை 5 மணிக்கு வர சொன்னால் கூட விஜயகாந்த் வந்துவிடுவார்.

read more- அண்ணன் – தம்பிக்கு ஜோடியாக நடிக்கும் அதிதி ஷங்கர்! உங்க காட்டுல மழை தான்!

இயக்குனர் என்ன சொன்னாலும் அதற்கு மறுப்பு தெரிவிக்கலாம் அதனை அப்படியே செய்வார்.
அதைப்போல படப்பிடிப்பு தளத்தில் பெரிய பேப்பர் ஒன்றை கொடுத்து இந்தவசனங்கள் அனைத்தையும் படித்துக்காட்ட சொன்னால் கூட ஒரே டேக்கில் நடித்து முடித்து கொடுப்பார். அவருக்கு இன்னுமே நிறைய திறமை இருக்கிறது. பலரும் அவரை ஆக்சன் ஹீரோவாக தான் வைத்து இருக்கிறார்கள். நான் தான் அவருடைய இன்னொரு பக்கத்தை வெளியே கொண்டு வந்தேன். அவருடைய இன்னும் சில திறமைகளை சில பேர் வெளியே கொண்டு வரவில்லை என்பது தான் என்னுடைய கருத்து. இன்னுமே கமர்ஷியலான எமோஷனல் படங்களில் விஜயகாந்தை நடிக்க வைத்து இருக்கலாம்” எனவும் விக்ரமன் சற்று வேதனையுடன் விக்ரமன் பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்