NZvsAUS : வெற்றியை பெருமா நியூஸிலாந்து அணி ..? இன்னும் 258 ரன்கள் தேவை ..!
NZvsAUS : நியூசிலாந்தில், ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வரும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது வெல்லிங்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ்வென்ற நியூஸிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
Read More :- BANvsSL : 3 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்ட இலங்கை வீரர் ..! இதுதான் காரணமா ..?
முதல் இன்னிங்சில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 115.1 ஓவருக்கு 10 விக்கெட்டுகள் இழந்து 383 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக கேமரூன் கிரீன் 185 பந்துகளுக்கு 103 ரன்கள் எடுத்தார். அதை தொடர்ந்து களமிறங்கிய முதல் இன்னிங்ஸ்க்கு களமிறங்கிய நியூஸிலாந்து அணி தட்டு தடுமாறி இறுதியில் 43.1 ஓவருக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 179 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதன் பிறகு 2-வது இன்னிங்ஸ்க்கு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி இந்த முறை வெறும் 164 ரன்கள் மட்டுமே எடுத்து 10 விக்கெட்டுகளையும் இழந்தது. 2-வது இன்னிங்ஸ்க்கு ஆஸ்திரேலிய அணியில் அதிக பட்சமாக லியான் 46 பந்துகளில் 41 ரன்கள் மட்டுமே எடுத்தார். நியூஸிலாந்து அணியில் க்ளென் பிலிப்ஸ் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். இதன் மூலம் நியூஸிலாந்து அணிக்கு 369 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
Read More :- WPL 2024 : கிரேஸ் ஹாரிஸ் அதிரடியால் யூபி அணி அபார வெற்றி ..! தொடர் தோல்வியில் குஜராத் அணி ..!
தொடக்க வீரர்களின் சொதப்பலால் நியூஸிலாந்து அணி 21 ஓவருக்கு 59-3 என தடுமாறியது. அதன் பிறகு 4-வது விக்கெட்டுக்கு கூட்டு சேர்ந்த ரச்சின் ரவீந்திராவும் 56*(94), டாரில் மிட்செலும் 12* (63) நிதானத்துடன் விளையாடி சரிவிலிருந்து நியூஸிலாந்து அணியை மீட்டு விளையாடி வருகின்றனர்.
தற்போது இன்றைய 3-வது நாளின் முடிவில் நியூஸிலாந்து அணி 41 ஓவருக்கு 3 விக்கெட்டை இழந்து 111 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இதனால் இன்னும் 258 ரன்கள் எடுத்தால் நியூஸிலாந்து அணி இந்த முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெரும்.