மங்களூரு குண்டுவெடிப்புக்கும் பெங்களூரு குண்டுவெடிப்புக்கும் சம்பந்தமில்லை.! சித்தராமையா பேட்டி.!

Karnataka CM Siddaramaiah

Rameshwaram Cafe : கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள  உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற ஓட்டலில் நேற்று மதியம் 1 மணி அளவில் திடீரென வெடிகுண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் உணவக ஊழியர்கள்  உட்பட 10 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் தடவியல் குழு மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் ஆகியோர் தீவிர ஆய்வு மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர். நேற்று சம்பவ இடத்திற்கு கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் நேரில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

Read More – ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவம்… IED வெடிகுண்டு.. அடுத்தடுத்து வெளியாகும் சிசிடிவி காட்சிகள்!

அப்போது பேசிய டி.கே.சிவகுமார், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் 28-30 வயதுக்கு உட்பட்ட ஒரு நபர் உணவகத்திற்குள் நுழைந்து, பின்னர், ஒரு சிறிய பையை விட்டு செல்கிறார். அங்கிருந்து அந்த நபர் வெளியேறிய பிறகு வெடிகுண்டு வெடித்தது. இதனை விசாரிக்க 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் பயப்பட வேண்டாம் என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து தற்போது செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா,  முகமூடி மற்றும் தொப்பி அணிந்த ஒரு நபர் பஸ்ஸில் உணவகம் வந்து டைமர் மூலம் வேதிப்பொருளை வெடிக்கச் செய்துள்ளார். துணை முதல்வரும், உள்துறை அமைச்சரும் நேற்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர். நானும் இன்று மருத்துவமனைக்கும், சம்பவம் நடந்த இடத்திற்கும் செல்ல உள்ளேன் என தெரிவித்தார்.

Read More – ராமேஸ்வரம் கஃபேவில் வெடிகுண்டு வெடித்த சிசிடிவி வெளியானது..!

மேலும், இது ஒரு அமைப்பின் வேலையா இல்லையா எனபது தெளிவாக தெரியவில்லை. அரசு தீவிர விசாரணை செய்து வருகிறது. இந்த விவகாரத்தில் பாஜக அரசியல் செய்யக் கூடாது. மங்களூர் குண்டுவெடிப்புக்கும், பெங்களூரு குண்டுவெடிப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை. குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

Read More – ரவா இட்லி ஆர்டர் செய்த ‘ராமேஸ்வரம் கஃபே’ குற்றவாளி.! வெளியான பரபரப்பு தகவல்கள்…

கடந்த 2022 நவம்பர் 19ஆம் தேதி 24 வயதான முகமது ஷாரிக் என்பவர் மங்களூருவில் ஆட்டோவில் குக்கரில் வெடிகுண்டை எடுத்துச் சென்ற போது, அவர் வைத்திருந்த வெடிகுண்டு எதிர்பாராத விதமாக வெடித்துச் சிதறியது. இதில் பலத்த காயமடைந்த முகமது ஷாரிக் சிகிச்சைக்கு பின்னர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
TVK Vijay Dharmapuri
Pradeep John -TN Rains
Kasthuri Shankar - Police Arrest
Arvind Kejriwal - Kailash Gahlot
Space X - Elon Musk
tn rainy