மக்களே உஷார்.! தொடங்கியது கோடை காலம்.. அதிகரிக்கும் அனல் காற்று.!

Summer 2024

Summer 2024 : நமது நாட்டில் கோடை காலம், தென்மேற்கு பருவமழை காலம், வடமேற்கு பருவமழை காலம், குளிர் காலம் என நான்கு வகை காலங்கள் பரவலாக நிலவி வருகின்றன. கோடைகாலமானது மார்ச் 1ஆம் தேதி முதல் தொடங்கி ஜூன் மாதம் வரையில் நீடிக்கும். அந்த வகையில் நேற்று முதல் கோடை காலம் தமிழகத்தில் ஆரம்பித்துவிட்டது. இதனால் வெயிலின் தாக்கம் அனல் காற்றின் அளவு பற்றிய செய்திகள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.

Read More – PKLSeason10 : விறுவிறு இறுதி ஆட்டம்.. முதன் முறையாக கோப்பை தட்டி தூக்கிய புனேரி பல்தான்.!

மழையின் அளவு பற்றி செய்தி வெளியிட்டு வந்த இந்திய வானிலை ஆய்வு மையம், தற்போது வெயிலின் தாக்கம், அனல் காற்றின் தாக்கம் எவ்வாறு இருக்கும் என முன்னோட்டத்தை அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஒரு சில இடங்களில் தற்போது இருந்தே 100 டிகிரி செல்சியஸை தாண்டி வெயிலின் அளவு பதிவாகி வருகிறது.

மேலும், இந்த ஆண்டு ‘எல் நினோ’ எனப்படும் பசுபிக் கடல் வெப்ப நீரோட்ட நிகழ்வு நடப்பு கோடை காலத்தில் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதாவது வெயிலின் தாக்கம் இந்த ஆண்டு அதிகமாக இருக்கும் என கூறியுள்ளது.

Read More – ரவா இட்லி ஆர்டர் செய்த ‘ராமேஸ்வரம் கஃபே’ குற்றவாளி.! வெளியான பரபரப்பு தகவல்கள்…

ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் வழக்கத்தை விட அனல் காற்றானது இந்த வருடம் அதிகமாக இருக்கும் என்றும், ஏப்ரல், மே மாதங்களில் வழக்கத்தை விட அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த தாக்கம் தமிழகத்திலும் நிலவும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Read More – NZvsAUS : 217 ரன்கள் முன்னிலையில் ஆஸ்திரேலியா அணி ..! கட்டுப்படுத்துமா நியூஸிலாந்து ..?

வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் காரணத்தால், பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள், வயதானவர் வெயிலின் தாக்கத்தை அறிந்து பொதுவெளியில் செல்வது உள்ளிட்ட வெயில் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்