ரவா இட்லி ஆர்டர் செய்த ‘ராமேஸ்வரம் கஃபே’ குற்றவாளி.! வெளியான பரபரப்பு தகவல்கள்…
Rameshwaram Cafe : பெங்களூரு ஒயிட்ஃபீல்டு பகுதியில் பிரபலமாக உள்ள ராமேஸ்வரம் கஃப ஹோட்டலில் நேற்று மதியம் 1 அளவில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஹோட்டலில் இருந்த ஊழியர்கள் உட்பட 10 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து கர்நாடக போலீசார் மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்திற்கு கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் ANI செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
Read More – ராமேஸ்வரம் கஃபேவில் வெடிகுண்டு வெடித்த சிசிடிவி வெளியானது..!
அவர் கூறுகையில், சம்பவம் குறித்து அனைத்து கோணங்களிலும் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை விசாரிக்க 7-8 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், பெங்களூரு அரசு பேருந்தில் குற்றவாளி வந்து சென்றதாகவும், சிறிய கை பை ஒன்றை வைத்திருந்ததாகவும், பின்னர் கேஷ் கவுண்டரில் ரவா இட்லி ஆர்டர் செய்து பின்னர் அதனை உட்கொள்ளாமல் அங்கிருந்து சென்றுவிட்டதாகவும் டி.கே.சிவகுமார் கூறினார்.
READ MORE- ராமேஸ்வரம் கஃபேயில் வெடித்த மர்ம பொருள்.. விசாரணைக்கு வந்த என்.ஐ.ஏ..!
அந்த நபர் சென்ற பிறகு ஒரு மணி நேரத்துக்கு பின்னர் அந்த பை வெடித்ததாக டி.கே.சிவக்குமார் கூறினார். பெங்களூர் மக்கள் கவலைப்பட வேண்டாம் என்றும் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கேட்டுக்கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து மைசூரில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, ஹோட்டலில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். ஹோட்டலில் யாரோ ஒரு இளைஞர் பையை வைத்து விட்டு சென்றது தெரியவந்துள்ளது. சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.
READ MORE- ராமேஸ்வரம் கஃபேவில் வெடித்தது வெடிகுண்டு தான்..முதல்வர் சித்தராமையா..!
முந்தைய அரசாங்கங்களிலும் இதுபோல பல குண்டுவெடிப்புகள்நிகழ்ந்துள்ளது. இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுப்போம். இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யக்கூடாது எனவும் முதல்வர் சித்தராமையா தெரிவித்துக் கொண்டார்.
இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து, பெங்களூரு காவல்துறையினர் கடுமையான சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் மற்றும் வெடிபொருள் தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.