மக்களவை தேர்தலில் தமிழக மக்கள் பாஜகவுக்கு பாடம் புகட்டுவர்! திருமாவளவன், செல்வப்பெருந்தகை கூட்டாக பேட்டி
Selvaperunthagai – Thirumavalavan: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக அண்மையில் தேர்வான செல்வபெருந்தகை, விசிக தலைவர் திருமாவளவனை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பேற்ற பின், தோழமை கட்சித் தலைவர்களை அடுத்தடுத்து செல்வப்பெருந்தகை சந்தித்து பேசி வருகிறார். அந்த வகையில் அவரின் திருமாவளவனுடனான சந்திப்பு நடைபெற்றது.
விசிக தலைமை அலுவலகமான சென்னை அசோக்நகர் அம்பேத்கர் திடலில் திருமாவளவனும், செல்வப்பெருந்தகையும் சந்தித்தனர். இதன் பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் பேசும் போது, “பாஜகவின் கனவு இங்கு பலிக்காது. அவர்கள் நினைப்பது போல தமிழ்நாடு வட இந்தியாவில் இருப்பது போன்ற மாநிலம் கிடையாது, மோடி எத்தனை முறை தமிழகம் வந்தாலும் பாஜக இங்கு வெற்றி பெறாது. வரும் மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் அவர்களுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள் என்றனர்.
Read More – அதிமுக-தேமுதிக இடையே குழு அமைத்து பேச்சுவார்த்தை: பிரேமலதாவை சந்தித்த எஸ்.பி. வேலுமணி பேட்டி
செல்வப்பெருந்தகை பேசும் போது, காங்கிரஸ் கமிட்டி தலைவராகப் பொற்றுப்பேற்ற பின்னர் திருமாவளவனை சந்தித்து வாழ்த்து பெற்ற்றுள்ளேன், அவர் வரும் மக்களவை தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் அவர் வெற்றிக்கு பாடுபடுவார்கள்” என்றார்.