பா.ஜ.க.வுக்கு எதிராக முழக்கம் …!சோபியா  மீது ஜாமினில் வரமுடியாத பிரிவுகளில் வழக்கு …!

Default Image

விமானத்தில் பா.ஜ.க.வுக்கு எதிராக முழக்கமிட்ட பெண் சோபியா  மீது ஜாமினில் வரமுடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்படுள்ளது.

நெல்லையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வருகை தந்த தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசையை விமானத்தில் வைத்து அவருக்கு எதிராக பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று கோஷமிட்டார் சோபியா என்ற பெண்மணி எனவே சோபியா மீது நடவடிக்கை எடுக்க கோரி விமான நிலைய போலீசாரிடம் பாஜக தலைவர் தமிழிசைசவுந்தராஜன் மனு அளித்தார்.இதனையடுத்து, சோபியாவை கைது செய்த போலீசார், நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். விசாரித்த தூத்துக்குடி நீதிமன்றம் தமிழிசை முன் முழக்கமிட்ட சோபியாவுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் என்று உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் விமானத்தில் பா.ஜ.க.வுக்கு எதிராக முழக்கமிட்ட பெண் சோபியா  மீது ஜாமினில் வரமுடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்படுள்ளது.மேலும் இவர் மீது 3  பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்