ராமேஸ்வரம் கஃபேவில் வெடித்தது வெடிகுண்டு தான்..முதல்வர் சித்தராமையா..!

Siddaramaiah

Rameshwaram Cafe: பெங்களூருவில் ஒயிட்ஃபீல்டில் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் இன்று பிற்பகல் மர்ம பொருள் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 4 பேர் காயமடைந்தனர் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறுகையில் “பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நடந்தது குண்டுவெடிப்புதான்.

முதற்கட்ட விசாரணையில் மேலோட்டமாக பார்க்கும் போது IED குண்டு வெடிப்பு போல் தெரிகிறது. காவல்துறை முறையான அறிக்கை வழங்கிய பிறகுதான் எந்த தகவலும் தெரிவிக்க முடியும். போலீசார் சம்பவ இடத்திலேயே உள்ளனர்.

READ MORE- ராமேஸ்வரம் கஃபேயில் வெடித்த மர்ம பொருள்.. விசாரணைக்கு வந்த என்.ஐ.ஏ..!

பாதிக்கப்பட்டவர்கள் யாரும் கவலைக்கிடமாக இல்லை, ஆனால் பலர் காயமடைந்தனர். சிசிடிவி ஆய்வு செய்யப்படுகிறது, சிசிடிவி காட்சிகளில் ஒருவர் ஓட்டலில் பையை விட்டுச் சென்றுள்ளார் என சித்தராமையா தெரிவித்தார். அந்த பையில் இருந்த பொருள் தான் ஓட்டலில் குண்டு வெடிப்பை ஏற்படுத்தியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

READ MORE- சூடுபிடிக்கும் அரசியல் களம்… மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி தொகுதி உடன்பாடு!

இந்த சம்பவம் குறித்து பேசிய கர்நாடக துணை முதல்வர் முதல்வர் டி.கே.சிவகுமார், “எங்கள் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். யார், ஏன் செய்தார்கள். இது வணிகப் போட்டியா? என்பது குறித்து விசாரிக்கப்படுகிறது. அனைத்து வீடியோக்களும் உள்ளன. எங்களிடம் 2-3 கிமீ சுற்றளவில் பயணித்தவர்களின் தகவல் உள்ளது. பீதி அடையத் தேவையில்லை என கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்