வேற லெவல் பா! ‘படம் பண்ணலாம்’.. எஸ்.ஜே.சூர்யாவை மிரள வைத்த இயக்குனர்?

S. J. Suryah

SJSuryah தற்போது தமிழ் சினிமாவில் வெளியாகவிருக்கும் பல படங்களில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா தான் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். சில படங்களில் நடித்தும் முடித்து இருக்கிறார். இயக்குனராக அறிமுகமாகி தற்போது வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து கலக்கி வரும் இவர் அடுத்ததாக இன்னுமே சில இயக்குனர்களிடம் கதை கேட்டு அந்த படங்களையும் கமிட் செய்து வருகிறார்.

நல்ல கதையம்சம் இருக்கும் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் எஸ்.ஜே.சூர்யா தற்போது ராயன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக விக்ரமுக்கு வில்லனாக சியான் 62 திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதைப்போல இந்தியன் 2, கேம்செஞ்சர் ஆகிய படங்களிலும் வில்லனாக நடித்து வருகிறார்.

Read more- பணத்திற்காக அந்த விஷயத்தை செய்யும் ஷ்ரத்தா தாஸ்? பயில்வான் சொன்ன சீக்ரெட்!

இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக மீண்டும் ஒரு படத்திலும் நடிக்க எஸ்.ஜே. சூர்யா முடிவு செய்துள்ளாராம். அந்த திரைப்படத்தை ரெமோ, சுல்தான் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கவுள்ளார். ஏற்கனவே, இவருடைய இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யாவை வைத்து இயக்கவுள்ள படம் குறித்த தகவல் வெளியாகி இருந்தது.

read more – ராயன் முதல் சியான் 62 வரை….எஸ்.ஜே.சூர்யாவின் மிரட்டல் லைன் அப்!! 

ஆனால், இன்னும் வரை படம் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்க முக்கிய காரணமே கதையை கேட்டு மிரண்டது தானாம். பாக்கியராஜ் கண்ணன் அந்த அளவிற்கு ஒரு மிரட்டலான கதையை எஸ்.ஜே.சூர்யாவிடம் கூறி அவரையே மிரள வைத்துவிட்டாராம். கதையை கேட்டு மிகவும் பிடித்தவுடன் உடனடியாக படம் செய்யலாம் என்று எஸ்.ஜே.சூர்யா கால்ஷீட் கொடுத்துள்ளாராம். விரைவில் இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

read more- 19 வயசுலே படுக்கைக்கு கூப்பிட்டாங்க! பாலிவுட் நடிகை வேதனை!

இதற்கிடையில், நடிகர் எஸ்.ஜே.சூர்யா தெலுங்கிலும் நானிக்கு வில்லனாக ‘சூர்யாவின் சனிக்கிழமை’ என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் நானியின் பிறந்த நாளை முன்னிட்டு கூட படத்தின் சின்ன டீசர் வீடியோ வெளியாகி இருந்தது. அதிலும் போலீஸ் வேடத்தில் எஸ்.ஜே.சூர்யா மிரட்டலாக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்