15 நிமிடங்கள் சுங்கச்சாவடியில் காத்திருக்க வருந்தும்..!நீதிமன்றங்கள் தேங்கியுள்ள வழக்குகளை நினைத்தும் வருந்துங்கள்..!கபில் சிபில் விமர்சனம்..!!
விஐபிக்கள், நீதிபதிகள் வாகனங்களுக்கு சுங்கச்சாவடியில் தனிப்பாதை குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபில் நீதிபதிகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.
விஐபிக்கள், நீதிபதிகள் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் தனிப்பாதைகள் அமைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கு காங். மூத்த தலைவர் கபில் சிபல் ட்வீட் செய்துள்ளார்.
அதில் ஒரு 15 நிமிடங்கள் சுங்கச்சாவடிகளில் காத்திருப்பதற்கு வருந்துவதைவிட, நீதிமன்றங்களில் பல வழக்குகள் தேக்கமடைந்திருப்பதை நினைத்தும் நீதிபதிகள் சற்று வருந்த வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபில் சாடியுள்ளார். நீதிமன்றம் விஐபிக்கள், நீதிபதிகள் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் தனிப்பாதைகள் அமைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
Madras High Court orders NHAI separate toll gates for VIP's ( including Judges ) and ordinary citizens .
A million cases pending in High Court's should worry judges a little more than having to wait 15 minutes at a toll bridge .
A creamy layer Republic ?
— Kapil Sibal (@KapilSibal) September 4, 2018
DINASUVADU