விஜயகாந்தை கோபப்படுத்திய ரவுடிகள்! படப்பிடிப்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம்?
Vijayakanth கேப்டன் விஜயகாந்த் பற்றியும் அவருடன் பயணித்தபோது அவர் செய்த செயல்களை பற்றி பிரபலங்கள் பலரும் பேசுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் பூந்தோட்ட காவல்காரன் படத்தில் ரவுடி பசங்களால் நடந்த அதிர்ச்சியான சம்பவம் பற்றிய தகவலை இயக்குனர் செந்தில் நாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
பூந்தோட்ட காவல்காரன் பட சமயத்தில் சில ரவுடி பசங்கள் ஹீரோயின்களை கேலி செய்துவிட்டு ஷூட்டிங்கை பார்த்துக்கொண்டு இருந்தார்களாம். இதனை பார்த்த படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர் லிவிங்ஸ்டன் அந்த பசங்களை அழைத்து பேசி இது போன்று செய்யாதீர்கள் என்று கூறினார்களாம். சரி சரி என்று கூறிவிட்டு அந்த பசங்கள் அந்த இடத்தில் இருந்து சென்றுகொண்டும் விட்டார்களாம்.
read more- தூங்கட்டும் எழுப்பாதீங்க! கறிசோறு போட்டு கேப்டன் விஜயகாந்த் செய்த செயல்?
பிறகு இயக்குனர் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோர் காரில் வேறு இடத்திற்கு சென்று கொண்டு இருந்தார்களாம். இதனை கவனித்த அந்த ரவுடி பசங்கள் கும்பலாக சேர்ந்து ஒரு இடத்தில் கம்புகளை வைத்து கொண்டு நின்று கொண்டு இருந்தார்களாம். பிறகு கார் மீது ஏறி காருக்குள் இருந்தவர்களை வெளியே இழுத்து கூட்டமாக தாக்கினார்களாம்.
அதில் ஒருவன் இயக்குனர் செந்தில் நாதன் தலையில் கல்லையும் போட வந்தாராம். இதனை பார்த்த லிவிங்ஸ்டன் அவரை எதுவும் செய்து விடாதே என்று கல்லை தள்ளிவிட்டு காப்பாறினாராம். இருப்பினும் அந்த ரவுடி பசங்கள் கேட்காமல் கையில் கிடைப்பதை தூக்கி தாக்கி கொண்டே இருந்தார்களாம். பிறகு இந்த தகவல் எப்படியோ படக்குழுவுக்கு தெரிந்தவுடன் அவர்கள் கூட்டமாக அந்த இடத்திற்கு வந்து அந்த ரவுடி பசங்களை தாக்கி பிடித்தார்களாம்.
read more- கமல் சாரை பார்த்தது கனவு மாதிரி இருக்கு! ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குனர் எமோஷனல்!
பிடித்த பிறகு அந்த பசங்களை காவல் நிலையத்திற்கும் அழைத்து சென்றார்களாம். பிறகு இந்த தகவல் விஜயகாந்திற்கு தெரிய வந்ததும் உடனடியாக இயக்குனர் செந்தில் நாதனுக்கு கால் செய்து எந்த காவல்நிலையம் நான் வருகிறேன் என்ன அவுங்களுக்கு அவ்வளவு திமிரு அவ்வளவு பெரிய ஆளா? அவுங்க என்று கோபப்பட்டாராம்.
read more- தெலுங்கு எல்லாம் இல்லை தமிழ் தான்! ‘தளபதி 69’ படத்திற்காக விஜய் எடுத்த முடிவு?
பின் அந்த ரவுடி பசங்களின் பெற்றோர்கள் அனைவரும் கண்ணீருடன் விஜயகாந்திடம் அவர்கள் படிப்பு போய்விடும் இந்த ஒரு முறை மன்னித்து விடுங்கள் மதுபோதையில் தெரியாமல் செய்து விட்டார்கள் என்று கூறினார்களாம். இதனால் தான் விஜயகாந்த் அவர்களை விடவும் சொன்னாராம். இருப்பினும் மிகவும் கோபமாக இருந்த காரணத்தால் அந்த ரவுடி பசங்களை இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் என அனைவருடைய காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்க சொன்னாராம். இந்த தகவலை தான் செந்தில் நாதன் பேட்டியில் கூறியிருக்கிறார்.