” பிஜேபியை பின்னுக்கு தள்ளியது காங்கிரஸ் “..தேர்தல் முடிவுகள் இதோ..!!

Default Image

கர்நாடகவில் நடைபெற்ற  உள்ளாட்சித் தேர்தலில் முதலிடம் பிடித்த காங்கிரஸ்

கர்நாடகாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில்  காங்கிரஸ் 982 இடங்களில் வெற்றி பெற்று முதலிடத்திலும், 929 இடங்களைப் பெற்று பா.ஜ.க இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளன.

 

கர்நாடகாவில் ஆகஸ்ட் 31-ம் தேதி உள்ளாட்சி அமைப்புகளுக்கானத் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 105 நகர உள்ளாட்சி அமைப்புகள், மைசூரு, துமகூரு, சிவமோகா ஆகிய 3 மாநகராட்சிகளில் இந்தத் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் மொத்தம்  67.51 சதவிகித ஓட்டுகள் பதிவாகின. இத்தேர்தலில் 30 வார்டுகளில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த தேர்தலில் எல்லாவற்றையும் சேர்த்து மொத்தம் 2,709 இடங்களுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று   எண்ணப்பட்டன. காங்கிரஸும் ஜனதா தளமும் கூட்டணி ஆட்சியில் உள்ள நிலையிலும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்தனியாகவே போட்டியிட்டன. நேற்று காலை முதலே காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றது இறுதியாக அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் முடிவில் காங்கிரஸ் 982 இடங்களையும், பா.ஜ.க 929 இடங்களையும், மதசார்பற்ற ஜனதா தளம் 307 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. நகர்ப்புறங்களில் அதிக இடங்களில் பா.ஜ.க-வும், கிராமப்புறங்களில் காங்கிரஸும் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளன….

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்