‘தந்தங்க’ளுக்காக 87 யானைகளை கொன்ற கொடூரம்…!!தந்தங்களை அறுத்து கொள்ளையடித்த கும்பல்..!!
ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் 90 யானைகள் ஒரே வாரத்தில் கொல்லப்பட்டது உயிரியல் ஆர்வலர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முழுவதும் யானைத் தந்தங்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதால் தந்தங்களுக்கான வேட்டையின் காரணமாக யானைகள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.
ஆம் போட்ஸ்வானா நாட்டின் வனப்பகுதியின் பல்வேறு இடங்களில் யானைகள் கொல்லப்பட்டு கேட்பாரற்று கிடந்ததுள்ளதை ஆப்பிரிக்காவின் உயிரியல் ஆய்வாளரான மைக் சேஸ் என்பவர் ட்ரோன் கேமராக்கள் மூலம் ஆய்வு நடத்திய போது இந்த கொடூர நிகழ்வு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.மேலும் யானைகளை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டு பின்னர் அதன் தந்தங்களை ஈவு இறக்கமின்றி அறுத்து எடுக்கப்பட்டது தெரியவந்தது.
இப்படி 87 யானைகளின் தந்தங்கள் அறுக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளது, மேலும் இதனோடு மட்டுமல்லாமல் 3 காண்டாமிருங்களும் கொல்லப்பட்டு கிடந்துள்ளது. இந்த நிலையில் தந்தங்களை அறுத்து திருடிய கும்பல் பற்றி இதுவரை தெரியவில்லை. இறக்கமில்லா சம்பவம் உயிரியல் ஆர்வலர்கள் இடையே கடும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
DINASUVADU