டெல்லியில் குவிந்த பாஜக தலைவர்கள்.. விரைவில் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு.!
BJP : கடந்த 2014 மற்றும் 2019 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது போல, வரும் மக்களவை தேர்தலில் 3வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்க பாஜக மூத்த தலைவர்கள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். பிரதமர் மோடி நாடு முழுதும் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.
நேற்று இரவு, டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக மூத்த தலைவர்கள் மக்களவை தேர்தல் குறித்த முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Read More – 300 யூனிட் மின்சாரம் இலவசம்..! சூரிய மின்சக்தி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
குறிப்பாக, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் , குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய், உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், ஜோதிராதித்ய சிந்தியா, கேசவ் மவுரியா, சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
Read More – உச்சகட்ட பரபரப்பு.! 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அதிரடி சஸ்பெண்ட்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை தயார் செய்து வெளியிட ஆலோசிக்கப்பட்டது என்றும், குறிப்பாக கடந்த முறை தோல்வி கண்ட தொகுதிகளில் யார் யாரை வேட்பாளர்களாக தேர்வு செய்யலாம் என ஆலோசைக்கப்பட்டதாக தெரிகிறது.
மாநிலங்கல்வையில் இருந்து தேர்வு செய்யப்பட்டு, மத்திய அமைச்சர்களாக இருக்கும் பூபேந்தர் யாதவ், தர்மேந்திர பிரதான் மற்றும் மன்சுக் மாண்டவியா உள்ளிட்டவர்களை இந்த முறை மக்களவை தேர்தலில் களமிறக்க முடிவு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Read More – உங்கள் நம்பிக்கையை பாஜக நிச்சயம் நிறைவேற்றும்… பிரதமர் மோடி உத்தரவாதம்!
இந்த ஆலோசனை கூட்டத்தில், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், கேரளா, தெலுங்கானா, ராஜஸ்தான், கோவா, குஜராத் மற்றும் பிற மாநிலங்களின் மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும். பஞ்சாப், ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கான வேட்பாளர்கள் பிறகு முடிவு செய்து கொள்ளலாம் என்று ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.