இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்? இன்றைய ராசி பலன்கள்.!

horoscope 3

Today Horoscope – மாசி மாதம் 18ஆம் தேதி[ மார்ச் 1, 2024 இன்றைக்கான ராசி பலன்களை இங்கே காணலாம்.

மேஷம்:

மேஷ ராசி அன்பர்களே.. இந்த நாள் வெற்றிகரமான நாளாக இருக்கும், எடுத்த காரியம் அனைத்துமே வெற்றி பெறும். உங்கள் துணை இன்று உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. வியாபாரத்தில் பண வரவு கிடைக்கும் .இன்று அதிர்ஷ்டம் பெருக நீங்கள் பயன்படுத்த வேண்டிய எண்= 9. நிறம்= அடர் சிகப்பு.

ரிஷபம்:

ரிஷப ராசி அன்பர்களே.. இன்று முயற்சி செய்து செய்யப்படும் அனைத்து காரியங்களுமே வெற்றி நிச்சயம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரலாம். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். ஆஞ்சநேயர் வழிபாடு நன்மையைத் தரும் அதிர்ஷ்ட எண்= 6,அதிர்ஷ்ட நிறம்= பால் வெள்ளை

மிதுனம்:

மிதுன ராசி அன்பர்களே .. இன்றைய நாளில் நல்ல வேலை வாய்ப்புகள் அமையும். தொழில் ரீதியான முயற்சியில்  வெற்றி பெறலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை ,பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். துணையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும் .அதிர்ஷ்டமான எண்= 5 அதிர்ஷ்டமான நிறம்= மரகதம்

கடகம்:

கடக ராசி அன்பர்களே.. இன்றைய நாள் முன்னேற்றமான நாளாக இருக்கும், குடும்பத்தில் பிரிவினை இருந்தால்  சுமூகமாகும். வெளிநாட்டிலிருந்து வருமானம் வரும். அதிர்ஷ்டமான எண்= இரண்டு. அதிர்ஷ்டமான நிறம்= சாம்பல்

சிம்மம்:

சிம்மராசி அன்பர்களே.. இன்று நீங்கள் உடன் பிறந்தவர்களுடன் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பூர்வீக சொத்தின் மூலம் வாக்குவாதம் ஏற்படலாம்.  வண்டி வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணப்படும். அதிர்ஷ்ட எண்= 1 அதிர்ஷ்ட நிறம்=  மாணிக்கம்

கன்னி:

கன்னி ராசி அன்பர்களே.. இன்றைய நாளில் உங்களுக்கு பொருளாதாரம் முன்னேற்றம் சிறப்பாக உள்ளது. பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரலாம். குழந்தைகளின் படிப்பில் முன்னேற்றம் காணப்படும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண வரன்கள் கை கூடி வரும் .குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் .அதிர்ஷ்ட எண்= 5, அதிர்ஷ்ட நிறம்= இளம் பச்சை

துலாம்:

துலாம் ராசி அன்பர்களே.. இன்று உங்களுக்கு யோகமான நாள். எதிரிகளை வெல்லக்கூடிய யோகம் உண்டு. புது வீடு வாங்க விற்க இன்று ஏற்ற நாள். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும், பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் .வியாபாரம் உங்களுக்கு சாதமாக அமையும். அதிர்ஷ்ட எண் = ஆறு, அதிர்ஷ்ட நிறம்= வெள்ளை

விருச்சிகம்:

விருச்சிக ராசி அன்பர்களே.. இன்று வெளியூர் மற்றும் வெளிநாட்டு பயணங்கள் ஏற்படலாம். உத்தியோக மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது .பண வரவு சிறப்பாக உள்ளது, சொத்துக்கள் வாங்க விற்க ஏற்ற நாள். புதிய பொறுப்புகள் வந்து சேரும். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை, ஆரோக்கியத்திலும் சற்று கவனம் தேவை .அதிர்ஷ்ட எண் = 9 .அதிஷ்ட நிறம்= பவள வண்ணம்

தனுசு:

தனுசு ராசி அன்பர்களே.. இன்று அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும் குறிப்பாக திருமண வரன்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். பொருளாதாரத்தில் வளர்ச்சி காணப்படும் புதிய பொறுப்புகள் வரும் குலதெய்வ வழிபாடு செய்வது வெற்றியைத் தரும் அதிர்ஷ்ட எண்= 3 அதிஷ்ட நிறம் =தேன் வண்ணம்

மகரம்:

மகர ராசி அன்பர்களே.. இன்று உங்களுக்கு அனுகூலமான நாள். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சொத்துக்கள் வாங்கும் யோகம் உள்ளது .பொருளாதாரத்தில் முன்னேற்றமான நாளாக இருக்கும். கலைத்துறையில் புதிய வாய்ப்புகள் வர வாய்ப்புள்ளது. அதிர்ஷ்டமான எண்=  4, அதிர்ஷ்ட நிறம்= பாக்கு நிறம்

கும்பம்:

கும்ப ராசி அன்பர்களே.. உங்கள் உறவினர்களுக்கிடையே விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். பணவரவு ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை ,தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரலாம். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். அதிஷ்ட எண்= 7 அதிர்ஷ்ட நிறம்= கத்தரிப்பு நிறம்.

மீனம்:

மீன ராசி அன்பர்களே.. இன்று நீங்கள் அமைதியாக இருப்பது நல்லது. குறிப்பாக பணியிடத்தில் பொறுமையாக இருக்க வேண்டும். பயணங்களில் கவனம் தேவை .வாகனம் வாங்கும் யோகம் உண்டு. அதிர்ஷ்ட எண்= 6 ,அதிர்ஷ்ட நிறம் =வெள்ளை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்