25 ஆயிரத்துக்கு போன் தேடுறீங்களா? உங்களுக்காகவே வந்துவிட்டது Oppo F25 Pro 5G!

Oppo F25 Pro 5G

Oppo F25 Pro 5G : ஒப்போ நிறுவனம் ‘Oppo F25 Pro 5G’ போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய போன் ஆனது  MediaTek Dimensity 7050 SoC இல் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரை உள் சேமிப்பக வசதியுடன்  வருகிறது. மேலும், இன்னும் இந்த போனில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது விலை என்ன? என்ன கலர்களில் வந்துள்ளது என்பது பற்றி விவரமாக பார்க்கலாம்.

read more- வந்தாச்சு புது அப்டேட்.. இனி பழைய வாட்ஸ்அப் மெசேஜை ஒரு நொடியில் பார்க்கலாம்…!

‘Oppo F25 Pro 5G’ சிறப்பு அம்சங்கள் 

  • இந்த ‘Oppo F25 Pro 5G’ போன் ஆனது 67W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி வசதியுடன் வருகிறது.
  • மேலும், இந்த போன் ஆனது 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மூலம் மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.  எனவே, புகைப்படம் எடுக்க விரும்புபவர்களுக்கு இந்த போன் கண்டிப்பாகவே பிடிக்கும். ஏனென்றால், மூன்று கேமரா இருப்பதால் போட்டோவின் தரம் நன்றாக இருக்கும்.
  • Oppo F25 Pro 5G போன் ஆனது ஆண்ட்ராய்டு அடிப்படையிலான ColorOS 14.0 இல் மூலம் இயங்குகிறது.
  • இந்த போனில் 6.7-இன்ச் முழு-HD+ (1,080×2,412 பிக்சல்கள்) டிஸ்ப்ளே இருப்பதால் படங்கள் மற்றும் வீடியோ பாடல்கள் கேட்கும்போது ஒரு நல்ல அனுபவம் கிடைக்கும்.
  • இந்த போனில்  256GB சேமிப்பகம்  8GB ரேம் (RAM)  இருக்கிறது. அந்த ரேம் போதாது என்றாலும் கூட 16 ஜிபி வரை நான் விரிவாக்கமும் செய்து கொள்ளலாம். கேம் விளையாடும் கேம் பிரியர்களுக்கு கண்டிப்பாக இது நன்றாக இருக்கும்.

கேமராவின் சிறப்பு அம்சங்கள் 

read more- மொபைல் வேர்ல்டுக்கு தாமதமாக வந்த Nothing Phone 2A.. வெளியீடு எப்போது? முக்கிய அம்சம் என்ன?

பின்பக்க கேமராவை பொறுத்தவரையில் இந்த போன்  64-மெகாபிக்சல் Omnivision இன் OV64 முதன்மை சென்சார், F/1.7 லென்ஸ் மற்றும் ஆட்டோஃபோகஸ் ஆகியவற்றைக் கொண்டு இருக்கிறது. மேலும், கேமரா அமைப்பில் F/2.2 லென்ஸுடன் 8-மெகாபிக்சல் ‘Sony IMX355 வைட்’-ஆங்கிள் சென்சார் மற்றும் f/2.4 லென்ஸுடன் 2-மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் ஆகியவையும் இருக்கிறது. மேலும் இந்த போனில் 4k வீடியோ ஆதரவும் இருக்கிறது.  எனவே, வீடியோ எடுப்பவர்களுக்கு கண்டிப்பாக இந்த போன் நன்றாக உதவும்.

read more- Leap year 2024: ‘லீப்’ தினத்தை முன்னிட்டு சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்.!

விலை மற்றும் கலர்கள்

இந்தியாவில் Oppo F25 Pro 5Gயின் 8ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பக மாடலின் ஆரம்ப விலை ரூ.23,999,க்கு வரும் அதேசமயம் 8ஜிபி ரேம் + 256ஜிபி சேமிப்பக வசதியை கொண்ட மாடலின் விலை ரூ.25,999க்கு வரும் என்று தெரிகிறது. மேலும், இவ்வளவு சிறப்பு அம்சங்களை கொண்டு இருக்கும் இந்த போன் இது Lava Red மற்றும் கடல் வண்ண கலர் ( Ocean Blue)   ஆகிய நிறங்களில் வரும் என்று கூறப்படுகிறது. மார்ச் 5 முதல் Oppo இன் இ-ஸ்டோர் , அமேசான், பிளிப்கார்ட் ஆகியவற்றில் வரும். 25, 26 ஆயிரம் பட்ஜெட்டில் போன் தேடுபவர்களுக்கு இந்த போன் நல்ல போனக இருக்கும். ஏனென்றால், அவ்வளவு சிறப்பான அம்சங்களை கொண்டு இருக்கிறது. எனவே, விருப்பம் இருப்பவர்கள் வாங்கி கொள்ளலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்