வந்தாச்சு புது அப்டேட்.. இனி பழைய வாட்ஸ்அப் மெசேஜை ஒரு நொடியில் பார்க்கலாம்…!
Whatsapp:பிரபல சமூக ஊடக செயலியான வாட்ஸ்அப் எப்போதும் தனது பயனர்களுக்கு சில புதிய அப்டேட்களை அவ்வப்போது கொண்டு வருகிறது. இந்த முறை வாட்ஸ்அப்பில் ஒரு புதிய அம்சத்தை கொண்டு வந்து பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த அம்சத்தின் மூலம், பயனர்கள் இனி பழைய மெசேஜ் , புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஸ்க்ரோல் செய்யாமல் நேரடியாக குறிப்பிட்ட தேதியில் சென்று பார்த்து கொள்ளலாம்.
READ MORE- மைக்ரோசாப்ட் கூகுளுக்கு போட்டியாக இந்த வருடம் களமிறங்கும் ஆப்பிள் AI.!- டிம் குக்
இந்த அம்சம் எப்படி வேலை செய்யும்..? இந்த அம்சத்தின் நன்மைகள் என்ன..? இது தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்வோம். வாட்ஸ்அப்பில் ஒரு செய்தி, புகைப்படம், அல்லது வீடியோவைத் தேட வேண்டுமென்றால் நாம் அடிக்கடி நீண்ட நேரம் ஸ்க்ரோல் செய்ய வேண்டியிருக்கும்.
இதற்கு அதிக நேரம் எடுக்கும், இந்த செயலால் பல பயனர்கள் டென்ஷன் ஆகிவிடுவார்கள் அந்த டென்ஷனை குறைக்கவும், நேரத்தை சேமிக்கவும், ஓரிரு வினாடிகளில் குறிப்பிட்ட தேதியில் உள்ள செய்தியை பார்க்க பயனர்களின் இதே பிரச்சனையை உணர்ந்து, வாட்ஸ்அப், தேதி மூலம் மெசேஜ் பார்க்கும் என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த அம்சம் முன்பு iOS, Mac Desktop மற்றும் WhatsApp Web ஆகியவற்றில்இருந்தது. இப்போது ஆண்ட்ராய்டு பயனர்களும் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த அம்சத்தைப் பயன்படுத்த முதலில் உங்கள் தனிப்பட்ட நபர் அல்லது குழுக்களுக்கு செல்லவும். தனிப்பட்ட நபரின் பழைய மெசேஜ் பார்க்க முதலில் அந்த நபரின் ப்ரொபைல் செல்லவும், அங்கு search பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்து உடன் search பட்டனில் வலது புறம் Calendar ஐகான் தோன்றும்.
READ MORE- மொபைல் வேர்ல்டுக்கு தாமதமாக வந்த Nothing Phone 2A.. வெளியீடு எப்போது? முக்கிய அம்சம் என்ன?
அந்தத் ஐகானைத் தேர்ந்தெடுத்த பிறகு, எந்தத் தேதிக்கான மெசேஜ் , புகைப்படம், வீடியோவை நீங்கள் விரும்புகிறீர்களோ அந்தத் தேதியை தேர்ந்தெடுக்கவும், பிறகு நீங்கள் குறிப்பிட்ட தேதியின் மெசேஜ் , புகைப்படம், வீடியோ உங்களுக்கு கிடைக்கும் வாட்ஸ்அப்பின் இந்த புதிய அம்சத்தால் பலர் பயனடைவார்கள். மேலும், இந்த அம்சம் பயனர்களின் மெசேஜ் , புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைத் தேடும் நேரத்தை மிச்சப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை