கர்ப்பமானதை அறிவித்த தீபிகா படுகோன்.! குழந்தை எப்போ தெரியுமா?

Deepika Padukone - pregnancy

Deepika Padukone: பாலிவுட் நட்சத்திர ஜோடியான தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் தங்களது முதல் குழந்தையை எதிர்பார்ப்பதாக தெரிகிறது. இருவரும் இன்று (பிப்ரவரி 29) தங்கள் கர்ப்பத்தை அறிவிக்கும் வகையில், ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதில், இந்த ஆண்டு செப்டம்பரில் தனக்கு குழந்தை பிறக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

Deepika Padukone pregnancy
Deepika Padukone pregnancy [image -@RanveerSingh]

READ MORE – நடுராத்திரியில் கதவை தட்டிய நடிகர்? ‘வெண்ணிற ஆடை நிர்மலா’ சொன்ன பகீர் தகவல்!

இதையறிந்த ரசிகர்கள் தீபிகா-ரன்வீர் ஜோடிக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த நற்செய்தியை அறிவித்ததும், பிரியங்கா சோப்ரா, சோனம் கபூர், மாதுரி தீட்சித், நீனா குப்தா, மசாபா குப்தா, விக்ராந்த் மாஸ்ஸி, மீரா ராஜ்புத், நேஹா துபியா, சோனாக்ஷி சின்ஹா ​​மற்றும் பல பிரபலங்களின் வாழ்த்துச் செய்திகளை குவித்து வருகின்றனர்.

READ MORE – சூரிக்கு பாராட்டு மழை தான்…பெர்லினில் கவனம் ஈர்த்த ‘கொட்டுக்காளி’ திரைப்படம்.!

இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின் ‘கோலியோன் கி ராஸ்லீலா ராம்-லீலா’ திரைப்பட படப்பிடிப்பு தளத்தில் இருவரும் சந்திக்கொண்டனர். அப்பொழுது இருவருக்கும் காதல் ஏற்பட்ட நிலையில், ஐந்து வருடங்கள் டேட்டிங் செய்த பின், 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இப்பொது, அவர்கள் இருவரும் இந்த ஆண்டு பெற்றோர்களாக போகிறார்கள்.

READ MORE – புதுப்படத்துக்கு சிம்பு கேட்ட சம்பளம்? தெறித்தோடிய பிரபல தயாரிப்பு நிறுவனங்கள்?

தீபிகா படுகோன் கடைசியாக இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கிய ‘ஃபைட்டர்’ படத்தில் நடித்திருந்தார். இதை தவிர, ‘கல்கி 2898’ எடி, ‘சிங்கம் எகைன்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்