Russia : ராணுவத்தில் வேலை ..2லட்சம் சம்பளம் ..இந்தியர்களை ஏமாற்றி கொலை செய்யும் ரஷ்ய ராணுவம் ..?

Russia Ukraine War : கடந்த வாரம் ரஷ்யாவில் நடைபெற்ற உக்ரைனில் நடைபெற்ற போரில் ரஷ்ய ராணுவத்திற்காக சண்டையிடும் போது இந்தியாவை சேர்ந்த 23 வயதான ஹெமில் மங்குயா ஆளில்லா விமான தாக்குல் விபத்தில்  மரணமடைந்தார்.  அவர் இறந்த பிறகு அவரது நண்பரான தாஹிர் முகமது இது விபத்து அல்ல, கொலை என்பதை விளக்கி கூறி இருக்கிறார்.

Read More :- அதிபர் வேட்பாளர் தேர்தல்: மிச்சிகனில் ஜோ பைடன், டொனால்ட் டிரம்ப் வெற்றி..!

இந்த சம்பவம் குறித்து அவர் கூறுகையில், “நாங்கள் வேலை தேடும் போது பாபா பிளாக்ஸ் என்ற யூடியூப் சேனலைக் கண்டுபிடித்தோம்.  அந்த சேனலில், ரஷ்ய ராணுவத்தில், பாதுகாப்பு உதவியாளர்களாக வேலை வாய்ப்புகள் இருப்பதாகவும் அதற்கு மாத சம்பளமாக ₹2 லட்சம் தருவதாகவும் விளம்பரம் செய்தனர். நான் அவர்களை தொடர்பு கொண்டு பேசும் போது அவர்கள், ரஷ்ய ராணுவத்திற்கு உதவுவது மட்டும்தான் உங்களது வேலையாக இருக்கும் எல்லைக்கு சென்று போர் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று வாக்குறுதி அளித்தனர்.

நான் ரஷ்யா செல்ல விசா, விமான டிக்கெட் மற்றும் இதர செலவுகளுக்காக 4 லட்ச ரூபாய்க்கு மேல் செலவு செய்தேன்.நான் ரஷ்யா சென்றதும் என்னைப்போல தேர்வு செய்யப்பட்ட அனைவரையும் இராணுவ முகாம்களுக்கு அழைத்து செல்லப்பட்டோம். அங்கு எங்களுக்கு 15 நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. அப்பயிற்சியில் அவர்கள் எங்களுக்கு துப்பாக்கி சுடுதல், கையெறி குண்டு வீசுதல், துப்பாக்கி பழுது பார்த்தால்போன்ற பலவற்றைக் கற்றுக் கொடுத்தனர்.

இந்த பயிற்சிகள் இருக்கும் என்று முன்பே எங்களுக்கு அவர்கள் தெரிவித்தனர். ஆனால் எல்லையில் இந்த பயிற்சிகளை பயன்படுத்த வேண்டும் என்று யாரும் எங்களிடம் அப்போது கூறவில்லை. மேலும், நாங்கள் மாஸ்கோவில் தரையிறங்கிய அடுத்த நிமிடமே எங்களது சிம் கார்டுகள் பறிக்கப்பட்டது. அதற்கு பதிலாக ரஷ்ய சிம்கார்டுகளை எங்களிடம் கொடுத்தனர். அதன் பின், பயிற்சியின் போது எங்களது போன்களும் வாங்கிக்கொண்டனர்.

Read More :- இஸ்ரேல் தூதரகம் முன்பு விமானப்படை வீரர் தீக்குளித்து தற்கொலை.!

இருந்தாலும் நானும், ஹெமிலும் வேறொரு போனை ஒளித்து வைத்திருந்தோம் நல்ல வேளையாக அது எங்களுக்குள் பேசிக்கொள்ள உதவியது. அதுதான் எனது உயிரையும் காப்பாற்றி உள்ளது. ஹெமிலின் ஒருநாள் எனக்கு போன் செய்து, இங்கு ஒரு மோசடி நடக்கிறது. நாங்கள் இப்போது உக்ரைனில் லுஹான்ஸ்க் அருகே எங்கோ  மூலையில், போரின் இருக்கிறோம்.

இங்கு ஒவ்வொரு நாளும் இரண்டு அல்லது மூன்று பேர் இறந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எங்களை போருக்காக உபயோகப்படுத்துகிறார்கள். மேலும், அங்கு இருக்கும் யாரையும் ரஷ்ய ராணுவத்தை பின் பற்ற வேண்டாம் எனவும், தயவு செய்து இந்தியாவிற்கு திரும்பி செல்லவும் கூறினார். ஹெமில் செய்த அந்த போனால் தான் நான் இன்று உயிருடன் இருக்கிறேன் “, என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் கூறி உள்ளார்.

Read More :- பயணிகள் கவனத்திற்கு.. இனி சென்னை பேருந்துகளில் UPI மூலம் டிக்கெட்..!

இந்த மோசடி தற்போது வெளியுறவு அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு பல இந்தியர்கள் ஏற்கனவே ராணுவத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு தாயகம் திரும்பிக் கொண்டிருப்பதை வெளிப்படுத்திகிறது. இந்த சம்பவம் இந்தியாவில் சற்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்