கோவிலில் பிரதட்சணம் செய்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

pratashnam

Pratashnam-நம் நினைத்த காரியம் நடக்க வேண்டி கடவுளிடம் சில வேண்டுதல்களை வைப்போம், அதில் பிரதட்சணமும் ஒன்று. பிரதட்சணத்தில் நான்கு வகை உள்ளது. அது என்னென்னவென்றும் அதை செய்வதால் ஏற்படும் நன்மைகள் என்னவென்றும்  இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

பிரதட்சணம்:

பிரதட்சணம் என்றால் சுற்றி வருதல் என அர்த்தம் ஆகும். சூரியனை மையமாக வைத்து மற்ற கிரகங்கள் சுற்றி வரும்போது அந்த சூரியனின் சக்தியை மற்ற கிரகங்களும் கிரகித்து அவைகளும் இயங்குகின்றது. இது போல்தான் நாமும் இறைவனை சுற்றி வந்து அங்குள்ள நேர்மறையான சக்தியை வாங்கிக் கொள்கிறோம்.

பிரதட்சணத்தில் நான்கு வகை உள்ளது.

ஆத்ம பிரதட்சணம்:

ஆத்ம பிரதட்சணம் என்பது இரு கைகளையும் வானை நோக்கி உயர்த்தி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு இறைவனை வணங்குதல் ஆகும்.

அடி பிரதட்சணம் :

அடி மேல் அடி வைத்து நம் கவனம் சிதறாமல் முழு இறை சிந்தனையுடன் வளம் வந்தால் மட்டுமே இதன் முழு பலனையும், பூமாதேவியின் அருளையும் பெற முடியும். அடி பிரதட்சணம் செய்வதன் மூலம் மனக்குழப்பம் நீங்கும். மனம் உறுதி மற்றும் பொறுமை நிலை உண்டாகும்.

அங்கப் பிரதட்சணம்:

தன்னைத்தானே சுற்றிக் கொண்டு இறைவனையும்  சுற்றி வரும்போது நம் மனமும் உடலும் ஆரோக்கியம் பெறும். அங்க பிரதட்சணம் செய்வதால் தடங்கள் விலகும். நீண்ட நாள் தடைபட்ட காரியம் விரைவில் நடக்கும்.

பிரபஞ்ச பிரதட்சணம்:

ஒரே இடத்தில் அமர்ந்து தியானம் மூலம் இறைவனை வலம் வருதல் ஆகும். இதை எந்த இடத்தில் வேண்டுமானாலும் எந்த தெய்வத்தை நினைத்தும் நினைவலைகளால் இறைவனை வலம்  வரும் முறையாகும். இது  சித்தர்களும் ஞானிகளும் பின்பற்றும் முறையாகும்.

ஆகவே இந்த முறைகளை  பின்பற்றி இறைவனை சுற்றி வரும் போது இறை சக்தியையும் அந்தக் கோவிலில் உண்டான நேர்மறையான சக்திகளையும் உங்களுக்குள்  ஆழ்ந்து பரவும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

pongal Train
Puducherry - Pongal 2025
Sakshi Agarwal Marriage Clicks
AlluArjun
TVK Vijay
Viluppuram - Protest