ICC Test Ranking : சொல்லி அடிக்கும் ஜெய்ஸ்வால் ..! பேட்டிங் தரவரிசையில் அதிரடி மாற்றம் ..!

ICC Ranking : இங்கிலாந்து அணி இந்தியாவில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை விளையாடி வருகிறது. இந்த தொடரின் 4-வது போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த தொடரின் 2-வது மற்றும் 3-வது போட்டியில் இந்திய அணியின் இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மிக சிறப்பாக விளையாடி வெற்றிக்கு வழிவகுத்தார்.

Read More :- ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம்.! விரக்தியில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹனுமா விஹாரி.!

அவரது சிறப்பான ஆட்டத்தால் ஐசிசி தரவரிசையில் மாற்றம் நிலவி உள்ளது. மேலும், அந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மானான ஜோ ரூட்டும் தரவரிசையில் இடம் மாறியுள்ளார்.  இந்த தொடரில் ஜெய்ஸ்வாலின் இரண்டு இரட்டை சதத்தால் இந்த மாற்றமானது நடந்துள்ளது. இதே போல இவர் அடுத்தடுத்து விளையாடும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடினாள் முதலிடத்தில் வேகமாக பிடித்துவிடுவார் என கருதப்படுகிறது.

ஜெய்ஸ்வால் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆகும் போது டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் 69-வது இடத்தில் இருந்தார். அவர் அறிமுகம் ஆகும் போது இந்திய அணிக்காக விளையாடுவதில் பெருமை கொள்கிறேன். என்னால் முடிந்த உழைப்பை இந்திய அணிக்காக கொடுப்பேன் என கூறி இருந்தார்.

Read More :- Nepal T20I : அடுத்த டிவில்லியர்ஸ் இவரா ? அதிவேக சதம் அடித்து நமீபியா வீரர் சாதனை ..!

தற்போது, அவர் சொல்லியதை உறுதி செய்யும் விதமாக 69-வது இடத்திலிருந்து படிப்படியாக முன்னேறி 12-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். இது மிகப்பெரிய மாற்றமாகும். மேலும், இங்கிலாந்து அணியின் வீரரான ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு பின்தங்கி உள்ளார். இது இந்த டெஸ்ட் தொடரில் அவர் ஒரு சதம் மட்டுமே அடித்தார்.

Read More :- குலசையில் இருந்து விண்ணில் பாய்ந்தது ரோகிணி ராக்கெட்!

மேலும், நியூஸிலாந்து வீரரான காணே வில்லியம்சன் டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கிறார். இந்தியாவின் 22 வயதே ஆன இளம் வீரர் ஜெய்ஸ்வாலின் இந்த முன்னேற்றம் அவரை பின் தொடரும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு உத்வேகமாக அமைந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்