சும்மா கிளப்பி விடாதீங்க! ‘கில்லி ரீ-ரீலீஸ்’ குறித்து குண்டை தூக்கிப்போட்ட தயாரிப்பாளர்.!

Ghilli Re-release

Ghilli Re-release: தற்பொழுது, தமிழ்நாட்டில் பழைய திரைப்படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்படும் கலாச்சாரம் திரையரங்குகளில் அதிகமாகி வருகிறது. அந்த வகையில், காதலர் தினத்தை முன்னிட்டு பல பழைய காதல் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில், தளபதி விஜய் நடிப்பில் 2004-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த ‘கில்லி’ படம் ரீ-ரிலிஸுக்கு தயாராகி வருவதாக தகவல் வெளியானது.

READ MORE – எம்மாடி திருமணம் மட்டுமே வேண்டவே வேண்டாம்! அலறும் நடிகை ஆண்ட்ரியா!

அதன்படி, ஏப்ரல் 17-ம் தேதி வெளியாக இருப்பதாக ஒரு போஸ்டர் சமுக வலைத்தளங்களில் பரவி வந்த நிலையில், விஜய் ரசிகர்கள் குஷியாக இருந்தனர். ஆனால், இப்பொழுது கில்லி ரீ-ரீலீஸ் தேதி குறித்து பரவி வரும் செய்திகளண்மையல்ல என்று கில்லி பட தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஏப்ரல் 17-ம் தேதி என குறிப்பிடப்பட்டிருந்த போஸ்டர் அதிகாரப்பூர்வமானது இல்லை என தெரிய வந்துள்ளது.

READ MORE – 43 வருட பந்தம்! தந்தை-தாய் குறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் எமோஷனல்!

இந்நிலையில், கில்லி ரீ-ரிலீஸ் குறித்து பேசிய தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், “அதை யார் அப்படிப் பதிவிட்டார் என்றே  தெரியவில்லை, அந்த செய்தி உண்மை இல்லை. இனிமேல் தான் ரீ- ரிலீஸுக்கான தேதியை முடிவு செய்யவுள்ளோம். மார்ச் மாதம் இறுதியிலோ அல்லது ஏப்ரல் மாதத் தொடக்கத்திலோ ரீ-ரிலீஸ் செய்ய வேண்டும் என்றுதான் யோசித்து வருகிறோம். விரைவில் தேதியை முடிவு செய்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்” என்று தனியார் ஊடக ஒன்றிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துக்கொண்டார்.

READ MORE – அஜித்துடன் அதை மறக்கவே முடியாது…புகழ்ந்த சிம்ரன்! சிக்னல் கொடுத்த எஸ்.ஜே.சூர்யா.!

திரையரங்குகளில் 200 நாட்களுக்கு மேல் ஓடி, ‘கில்லி’ திரைப்படம் பிளாக்பஸ்டராக மாறியது. தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த ‘ஒக்கடு’ படத்தின் ரீமேக் தான் கில்லி திரைப்படம். மேலும், இந்த படும் 2004-ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த படமாகவும் அமைந்தது. மேலும் படத்திற்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய, வித்யாசாகர் இசையமைக்க, படத்தின் வசனத்தை பரதன் எழுதியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்