இஸ்ரேல் தூதரகம் முன்பு விமானப்படை வீரர் தீக்குளித்து தற்கொலை.!

Israel Embassy - One died

அமெரிக்காவில் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன்பு விமானப்படை வீரர் தீக்குளித்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் – காசா இடையிலான போர் கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், அமெரிக்காவின் ராணுவ வீரர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது சர்வதேச அளவில் அதிர்வலையை கிளப்பியுள்ளது.

Read More – ரம்ஜானை முன்னிட்டு இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம்.. அமெரிக்க அதிபர் தகவல்.!

அமெரிக்காவின் டெக்சாஸை சேர்ந்தவர் ஆரோன் புஷ்னெல் (25). அமெரிக்க விமானப்படையில் உயர் பதவியில் இருந்த இவருக்கு, நெருங்கிய ராணுவ தொடர்புகள் இருந்தன. காசா போர் தொடர்பாக தொடர்ந்து அதிருப்தியில் இருந்து வந்த ஆரோன், அது தொடர்பாக பல்வேறு நிகழ்வுகளையும் முன்னெடுத்து வந்தார்.இந்த நிலையில், இஸ்ரேல் – காசா போர் முடிவுக்கு வராத நிலையில், நேற்று வாஷிங்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Read More – மேற்கு ஆப்பிரிக்காவில் கத்தோலிக்க சர்ச்சில் துப்பாக்கி சூடு.! 15 பேர் உயிரிழப்பு.!

அப்போது இராணுவ சீருடை அணிந்திருந்த ஆரோன் “பாலஸ்தீனத்தை விடுவித்துவிடுங்கள்” என்று முழக்கமிட்டு தீ வைத்துக்கொண்டார். உடனே பாதுகாப்புப் பணியில் இருந்த வீரர்கள் தீயை அணைக்க முயன்றனர். பின்னர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி ஆரோன் உயிரிழந்தார். இந்த தற்கொலை தொடர்பாக வாஷிங்டன் காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவத்தில் தூதரக ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று இஸ்ரேலிய தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi