பலதுறை பிரதிநிதிகளுடன்.. திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு ஆலோசனை..!
சென்னை அண்ணா அறிவாலத்தில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு ஆலோசனை நடத்தி வருகிறது.
நாடளுமன்ற தேர்தலை தொடர்ந்து தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக திமுக துணைப்பொதுச்செயலாளர் எம்.பி கனிமொழி தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் கடந்த 5-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டனர்.
READ MORE- தொடர் இழுபறி… ராஜ்யசபா சீட் கேட்டு உறுதியாக நிற்கும் தேமுதிக? மறுக்கும் அதிமுக…
சென்னை அண்ணா அறிவாலத்தில் திமுக தேர்தல் அறிக்கை தயாரித்துக் குழுவினர் பலதுறை பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இந்த ஆலோசனை கூட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், வணிகர் சங்கங்கள், நெசவாளர்கள், மீனவ சங்கங்கள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள் ஈடுபட்டுள்ளனர்.
READ MORE- நேற்று தமாக.. இன்று தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்..! அதிருப்தியில் அதிமுக..!
எம்.பி கனிமொழி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள 11 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை குழு பலதுறை பிரதிநிதித்துவம் கருத்துக்களை கேட்டு வருகின்றனர். திமுக தேர்தல் அறிக்கை இடம்பெறவேண்டிய அம்சங்கள் தொடர்பாக பல தரப்பினரிடம் இருந்து 4000 கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளது.