3 மாநிலங்கள்… 15 எம்.பிக்கள்.. இன்று மாநிலங்களவை தேர்தல்..
நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவைகளில் மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும். மாநிலங்களவை உறுப்பினர்களை மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுப்பார்கள். ஒவ்வொரு பிரதான அரசியல் கட்சியும் தங்கள் கட்சி எம்எல்ஏக்களின் பலத்தை கொண்டு மாநிலத்தில் தங்கள் கட்சிக்கான மாநிலங்களவை வேட்பாளரை முன்னிறுத்தும்.
மாநிலங்களவை தேர்தல் :
ஒவ்வொரு கட்சியும் தங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை கொண்டு வேட்பாளர்களை நிறுத்துவதால், பெரும்பாலும் மாநிலங்களவை தேர்தல் நடைபெறுவது இல்லை. இருந்தும் ஒரு சில இடங்களில் மட்டும் கூடுதலாக வேட்பாளர்களை நிறுத்துவதன் மூலம் தேர்தல்கள் அங்கு கட்டாயம் நடைபெறும் சூழல் ஏற்பட்டு விடுகிறது.
Read More – பிரதமர் மோடியின் 2 நாள் தமிழக பயணம்… திருப்பூர், தூத்துக்குடி, நெல்லை முழு விவரம்…
வருகிற ஏப்ரல் 2 தேதியுடன் 13 மாநிலங்களில் உள்ள 50 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலமும், ஏப்ரல் 3ஆம் தேதி உடன் 2 சட்டமன்றங்களில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிகாலமும் என மொத்தம் 15 மாநிலங்களில் 56 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி நிரப்பப்பட உள்ளது.
காலியிடங்கள் :
உத்தர பிரதேசத்தில் 10 மாநிலங்களவை உறுப்பினர்கள், மகாராஷ்டிராவில் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள், பிஹாரில் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள், மேற்கு வங்கத்தில் 5 மாநிலங்களவை உறுப்பினர்கள், மத்திய பிரதேசத்தில் 5 மாநிலங்களவை உறுப்பினர்கள், குஜராத்தில் 4 மாநிலங்களவை உறுப்பினர்கள், கர்நாடகாவில் 4 மாநிலங்களவை உறுப்பினர்கள், ஆந்திர பிரதேசத்தில் 3மாநிலங்களவை உறுப்பினர்கள், தெலங்கானாவில் 3 மாநிலங்களவை உறுப்பினர்கள், ராஜஸ்தானில் 3 மாநிலங்களவை உறுப்பினர்கள் , ஒடிசாவில் 3 மாநிலங்களவை உறுப்பினர்கள், உத்தராகண்ட்டில் 1 மாநிலங்களவை உறுப்பினர், சத்தீஸ்கரில் 1 மாநிலங்களவை உறுப்பினர், ஹரியாணாவில் 1 மாநிலங்களவை உறுப்பினர்கள், மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் 1 மாநிலங்களவை உறுப்பினர் என 56 மாநிலங்கவை உறுப்பினர்கள் பதவிக்காலம் நிறைவு பெற உள்ளது .
Read More – 554 ரயில் நிலையங்கள்… 1,500 ரயில்வே மேம்பாலங்கள் திட்டப்பணிகள்.! பிரதமர் மோடி துவக்கம்.!
எங்கு தேர்தல் :
இதில் சோனியா காந்தி, ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் உட்பட 41 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு விட்டதால் 3 மாநிலங்களில் மட்டுமே 15 இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. கர்நாடகா, உத்திர பிரதேசம், ஹிமாச்சல் பிரதேஷ் என மூன்று மாநிலங்களுக்கு மட்டும் இன்று சட்டப்பேரவையில் மாநில எம்எல்ஏக்கள் தங்கள் வாக்குகளை செலுத்த உள்ளனர்.
கர்நாடகா :
கர்நாடக மாநிலத்தில் உள்ள காலியாக இருக்கும் 4 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில், காங்கிரஸ் 3 வேட்பாளர்களையும், பாஜக ஒரு வேட்பாளரையும் நிறுத்தியது. இதனால் முதலில் போட்டி இல்லை என்று இருந்த நிலையில், அடுத்ததாக மதச்சார்பற்ற ஜனதா தளம் ஒரு வேட்பாளரை நிறுத்தி கர்நாடகாவில் மாநிலங்களவைத் தேர்தலை மஜத உறுதிப்படுத்தியது.
Read More – நாடாளுமன்ற தேர்தல்: தமிழ்நாட்டிற்கு வருகை தரவுள்ள 25 கம்பெனி மத்திய ஆயுதப் படையினர்
உத்திர பிரதேசம் :
அடுத்து உத்திரபிரதேசத்தில் காலியாக உள்ள 10 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு ஆளும் பாஜக 7 வேட்பாளர்களை நிறுத்தியது. சமாஜ்வாடி 3 வேட்பாளர்களை நிறுத்தி இருந்தது. இதனை அடுத்து பாஜக கூடுதலாக ஒரு வேட்பாளரை நிறுத்தி தேர்தலை அங்கு உறுதி செய்து உள்ளது. இதனால் உத்தர பிரதேசத்திலும் இன்று தேர்தல் நடைபெற உள்ளது.
இமாச்சல் பிரதேசம் :
அதேபோல இமாச்சல் பிரதேசத்திலும் இன்று தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு காலியாக இருக்கும் ஒரு இடத்திற்கு ஆளும் காங்கிரஸ் ஒரு வேட்பாளரையும் எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜக ஒரு வேட்பாளரையும் நிறுத்தியுள்ளது.
மாநிலங்களை உறுப்பினர்களுக்கான தேர்தல் அந்தந்த மாநில சட்டப்பேரவையில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி 4 மணிக்கு நிறைவடையும். வரும் பிப்ரவரி 29ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் முடிவுகள் வழியாக உள்ளது.